கனடாவில் இருந்து இந்த நாட்டிற்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படும்! முக்கிய அறிவிப்பு


கனடாவில் இருந்து டொமினிக்கன் குடியரசு நாட்டிற்கு அதிகளவு விமானங்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் இருந்து பிரபலமான சுற்றுலா தலமான புவேர்ட்டோ பிளாட்டாவிற்கு புதிய பாதையை டொமினிக்கன் குடியரசு அனுமதித்துள்ளது.
புவேர்ட்டோ பிளாட்டா டொமினிக்கானின் பிரபலமான நகரமாகும்.

நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து வாரியம் புதிய சன்விங் விமானத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது, அக்டோபர் 18, 2022 வரை அதிக விமானங்கள் இயக்கப்படும் என்று சுற்றுலா அதிகாரிகள் இந்த வாரம் அறிவித்தனர்.

இந்த விமானம் வாரந்தோறும் செவ்வாய் கிழமைகளில் இயக்கப்படும் என டொமினிகன் சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் இருந்து இந்த நாட்டிற்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படும்! முக்கிய அறிவிப்பு | More Flights From Canada To Dominican Republic

Sunwing Travel Group



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.