பழி வாங்கிய ரஷ்யா… உறுப்பு நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் இட்ட கட்டளை


ரஷ்யாவில் இருந்து எரிவாயு வரத்து ரத்தாகலாம் என விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், எரிவாயு பயன்பாட்டை குறைக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் உறுப்பு நாடுகளிடம் கூறியுள்ளது.

ஐரோப்பாவில் அமைந்துள்ள மிகப்பெரிய திட்டம் வாயிலாக ரஷ்யாவில் இருந்து அனுப்பப்படும் எரிவாயு குறைக்கப்படும் அல்லது ரத்தாகும் சூழல் உருவாகும் என ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் அவசர நடவடிக்கையாக மார்ச் வரையில் எரிவாயு பயன்பாட்டை 15% அளவுக்கு குறைக்க உறுப்பு நாடுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது ஐரோப்பிய ஒன்றியம்.

பழி வாங்கிய ரஷ்யா... உறுப்பு நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் இட்ட கட்டளை | Putin Warning Europe Races Cut Russian Gas

ஐரோப்பாவுக்கான ரஷ்யாவின் எரிவாயு ஏற்றுமதியில் மூன்றில் ஒருபகுதி Nord Stream 1 திட்டம் வாயிலாக முன்னெடுக்கப்படுகிறது.
தற்போது 10 நாட்கள் நீளும் ஆண்டு பராமரிப்பும் முடிவடைந்து வியாழக்கிழமை முதல் விநியோகம் துவக்கப்பட வேண்டும்.

கடைசியாக ஜூலை 10ம் திகதி, பராமரிப்பு துவங்கப்படுவதற்கு முன்னர் 698 GWh அளவுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தும் எரிவாயு விநியோகம் துவங்கப்படவில்லை என்றே தெரிய வந்துள்ளது.

இந்த நிலையிலேயே, எதிர்வரும் மார்ச் மாதம் வரையில் அவசர நடவடிக்கையாக எரிவாயு பயன்பாட்டை 15% அளவுக்கு குறைக்க உறுப்பு நாடுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது ஐரோப்பிய ஒன்றியம்.

மேலும், ரஷ்யா நம்மை மிரட்டி வருகிறது என ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார் ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன்.
மட்டுமின்றி, ரஷ்யா எரிசக்தியை ஆயுதமாக பயன்படுத்துவதாகவும்,

பழி வாங்கிய ரஷ்யா... உறுப்பு நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் இட்ட கட்டளை | Putin Warning Europe Races Cut Russian Gas

எந்தவொரு சூழலிலும், அது ரஷ்ய எரிவாயு விநியோகத்தை பகுதியளவு குறைத்தாலும், அல்லது பெருமளவு குறைத்துக்கொண்டாலும் அல்லது ரஷ்ய எரிவாயுவை மொத்தமாக முடக்கினாலும், அதை எதிர்கொள்ள ஐரோப்பா தயாராக இருக்க வேண்டும் என உர்சுலா சூளுரைத்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் இந்த முடிவானது ஜூலை 26ம் திகதி அமைச்சர்களால் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும்.
எரிவாயு விவகாரத்தில் தொழில்நுட்ப கோளாறை பயன்படுத்தி ரஷ்யா பழி வாங்கும் நடவடிக்கையை முன்னெடுத்து வருகிறது.
ரஷ்யாவின் இந்த கடும்போக்கு நடவடிக்கையால், ஜேர்மனி மொத்தமாக இருளில் மூழ்கும் என்றே அஞ்சப்படுகிறது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.