பறக்கும் விமானத்தில் திடீரென்று ஒருவர் இறக்க நேர்ந்தால், அவசரம் ஏதுமின்றி பயணம் முடியும் மட்டும் ஊழியர்கள் காத்திருப்பார்கள் என்றே தெரிய வந்துள்ளது.
இது தொடர்பில் வெளியான ஆய்வு ஒன்றில், ஒவ்வொரு 600 விமானங்களில் ஒன்றில் வானத்தில் பறக்கும் போது மருத்துவ பிரச்சனையை சந்திப்பதாக தெரியவந்துள்ளது.
மூச்சு விடுவதில் சிக்கல், இருதய கோளாறு, மயக்கமிடுதல், குமட்டல் அல்லது வாந்தி உட்பட மருத்துவ உதவியை பயணிகள் நாடியுள்ளதாகவும், ஆனால் மிக அரிதாக 0.3% மருத்துவ பிரச்சனையானது பறக்கும் விமானத்தில் மரணத்தில் முடிந்துள்ளது எனவும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், விமானத்தில் திடீரென்று ஒரு பயணி மரணமடைந்ததால் அவசரமாக விமானத்தை தரையிறக்க வேண்டிய கட்டாயமும் விமானிக்கு இல்லை என கூறப்படுகிறது.
ஆனால் தகவலை உரிய முறைப்படி கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டும் என்பது மட்டுமின்றி, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக விதிகளும் இல்லை என்றே கூறப்படுகிறது.
மருத்துவ சிக்கலை எதிர்கொள்ளும் பயணிக்கு உரிய முதலுதவி அளிக்கப்படும் எனவும், சூழலை கட்டுக்குள் வைத்து முதலுதவி அளிக்கப்படும், அதில் தோல்வியுற்று பயணி மரணிக்க நேர்ந்தால், விமானம் இறுதியாக தரையிறங்கும் மட்டும் மரணித்த பயணி அவரது இருக்கையிலேயே பத்திரமாக கொண்டு செல்லப்படுவார்.
மேலும், மருத்துவ பிரச்சனையை எதிர்கொள்ளும் பயணிக்கு, அந்த விமானத்தில் ஏதேனும் மருத்துவர் பயணித்தால் அவரது உதவியை நாடுவார்கள் என்றே கூறப்படுகிறது.
மட்டுமின்றி, இதுபோன்ற இக்கட்டான சூழலில் விமானியின் முடிவே இறுதியானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.