இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவர் யார்?!
இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருக்கும் ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவிக்காலம் இம்மாதத்துடன் நிறைவடைகிறது. இதனால் புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தடுப்பதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டார். ஆளும் பாஜக கூட்டணியின் வேட்பாளராக திரெளபதி முர்மு அறிவிக்கப்பட்டார். இவர்கள் இருவரும் கடந்த சில நாள்களாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு கட்சித் தலைமைகளை சந்தித்து, அவர்களிடம் ஆதரவு கோரினர்.
இந்த நிலையில் கடந்த 18 -ம் தேதி நாடு முழுவதும், குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்து முடிந்தது. நாடாளுமன்றத்திலும், மாநில சட்டப்பேரவையிலும் எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் தங்களின் வாக்குகளை செலுத்தினர்.
வாக்குச்சீட்டுகள் வாக்குப்பெட்டியில் சீலிடப்பட்டு டெல்லிக்கு கொண்டு செல்லப்ப்ட்டது. இன்று காலை இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளது. ஒவ்வொரு மாநில எம்.எல்.ஏ-க்களுக்கும் தங்கள் வாக்குகளின் மதிப்பு மாறுப்படும். அது மாநில மக்கள் தொகை அடிப்படையில் முடிவு செய்யப்படுகிறது. அதன்படி வாக்கு மதிப்புகள் கூட்டப்பட்டு இறுதியில் அதிக வாக்கு மதிப்புகள் பெறும் வேட்பாளர் வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்படுவார்.!