புதுடெல்லி, : ஒன்றிய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர நடத்தப்படும் ஜேஇஇ மெயின் நுழைவுத்தேர்வு 2 கட்டமாக நடத்தப்படும். முதல் கட்ட தேர்வு கடந்த மாதம் 23ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடந்தது. இதன் முடிவுகள் கடந்த 12ம் தேதி வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, 2ம் கட்ட நுழைவுத்தேர்வு வரும் 21ம் தேதி முதல் வரும் 30ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 2ம் கட்ட தேர்வு 21க்கு பதிலாக வரும் 25ம் தேதிக்கும் தொடங்கும் என தேசிய தேர்வு முகமை நேற்று அறிவித்துள்ளது. தேர்வு ஒத்திவைப்புக்கான காரணங்கள் வெளியிடப்படவில்லை. இத்தேர்வை நாடு முழுவதும் 6.29 லட்சம் பேர் எழுதுகின்றனர். இந்தியாவில் 500 நகரங்களிலும் வெளிநாட்டில் 17 நகரங்களிலும் நடக்கும் இத்தேர்வுக்கான அனுமதி அட்டையை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.