எஸ்பிஐ வாங்கி தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது புதுப்புது வசதிகளை செய்து வருவதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் தற்போது புதிதாக வாட்ஸ் அப் மூலம் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கி கணக்கில் உள்ள பல்வேறு விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
இது குறித்து தனது டுவிட்டரில் எஸ்பிஐ வங்கி விளக்கமாக சில தகவல்களை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளரா நீங்கள்.. MCLR வட்டி விகிதம் உயர்வு.. உங்களுக்கு என்ன பாதிப்பு?
வாட்ஸ்அப் வங்கி சேவை
வாட்ஸ்அப் மூலம் தங்கள் கணக்குகளை அணுக விரும்பும் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு பெரிய அப்டேட் வெளிவந்துள்ளது. அதாவது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு வங்கி சேவையை எளிதாக்கும் வகையில் வாட்ஸ்அப் வங்கி சேவையை தொடங்கியுள்ளது.
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள்
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப்பை பயன்படுத்தி சில வங்கி சேவைகளை பெறலாம் என்றும், இது பலருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் எஸ்பிஐ தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கி விபரங்களை இனி பதிவிறக்கவோ அல்லது ஏடிஎம்மிற்கு செல்லவோ வேண்டியதில்லை.
எஸ்பிஐ ட்விட்
எஸ்பிஐயின் தலைவர் தினேஷ் காரா வாட்ஸ்அப் வழியில் செல்லும் வங்கியின் திட்டங்களை கூறிய சில நாட்களுக்கு பிறகு எஸ்பிஐ இந்த வசதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. உங்கள் வங்கி இப்போது வாட்ஸ்அப்பில் உள்ளது என்றும், உங்கள் அக்கவுண்ட் பேலன்ஸ் குறித்தும், பயணத்தின்போது மினி ஸ்டேட்மெண்ட்டையும் இனி உங்கள் வாட்ஸ் அப் செயலி மூலமே பார்த்து கொள்ளலாம் என்று எஸ்பிஐ ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
ஹாய் மெசேஜ்
எஸ்பிஐ வாடிக்கையாளர் முதலில் தனது வாட்ஸ் அப் செயலியில் இருந்து +919022690226 என்ற எண்ணுக்கு ‘ஹாய்’ என்று ஒரு மெசேஜ் அனுப்ப வேண்டும். இதன் மூலம் எஸ்பிஐ வாட்ஸ்அப் பேங்கிங் சேவைகள் தங்களுக்குக் கிடைக்குமா? என்பதை வங்கி வாடிக்கையாளர்கள் உறுதி செய்து கொள்ளலாம்.
வாட்ஸ்அப் வங்கி சேவைகளை செயல்படுத்துவது எவ்வாறு?
எஸ்பிஐ வாட்ஸ்அப் வங்கி சேவைகளை எவ்வாறு பெறுவது என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
1. வாட்ஸ் அப் செயலியில் முதலில் நீங்கள் உங்கள் வங்கிக்கணக்கை பதிவு செய்ய வேண்டும். இதற்காக வங்கியில் வழங்கிய மொபைல் எண்ணின் வாட்ஸ்அப்பில் எஸ்பிஐ வங்கி சேவைகளைப் பெற முதலில் உங்கள் ஒப்புதலை வழங்க வேண்டும்.
2. இந்த சேவைகளைப் பயன்படுத்துவதற்குப் பதிவு செய்து உங்கள் ஒப்புதலை வழங்க, WAREG A/c என்று டைப் செய்து 917208933148 என்ற எண்ணுக்கு உங்கள் வங்கியில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து எஸ்.எம்.எஸ் அனுப்ப வேண்டும்.
3. நீங்கள் பதிவுசெய்த பிறகு, +919022690226 என்ற எண்ணில் ‘Hi’ SBI எனத் தட்டச்சு செய்யவும். உடனடியாக உங்களுக்கு ‘அன்புள்ள வாடிக்கையாளரே, நீங்கள் எஸ்பிஐ வாட்ஸ்அப் வங்கி சேவைகளுக்கு வெற்றிகரமாக பதிவு செய்துள்ளீர்கள்” என்று பதில் வரும்.
4. வாட்ஸ் அப் சேவையை நீங்கள் பெற்றவுடன் உங்கள் கணக்கு இருப்பை சரிபார்க்க அல்லது உங்களின் கடைசி ஐந்து பரிவர்த்தனைகளின் மினி அறிக்கையை பெற்று கொள்ளலாம்.
கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள்
இந்த வாட்ஸ் அப் சேவை எஸ்.பி.ஐ கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும். உங்கள் கிரெடிட் கார்டு குறித்த பணபரிவர்த்தனை விவரங்கள், பணம் இருப்பு குறித்த விவரம், ரிவார்டு பாய்ண்ட்ஸ், கிரெடிட் கார்டு மூலம் செய்யப்பட்ட பணபரிவர்த்தனை குறித்த விவரங்கள் ஆகிய அனைத்தையும் வாட்ஸ் அப் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
மற்ற வங்கிகள்
ஏற்கனவே வாட்ஸ் அப் சேவையை ஹெச்.டி.எஃப்.சி வங்கி, யெஸ் வங்கி ஐசிஐசிஐ வங்கி, இந்துஸ்தான் வங்கி, பேங்க் ஆஃப் மஹாராஷ்டிரா, ஆக்ஸிஸ் மற்றும் ஐடிஎஃப்சி ஆகிய வங்கிகள் வழங்கி வரும் நிலையில் இந்த பட்டியலில் தற்போது எஸ்பிஐ வங்கியும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
How to use SBI WhatsApp banking, what services are available?
How to use SBI WhatsApp banking…, what services are available? | நீங்கள் எஸ்பிஐ வாடிக்கையாளரா? இனி வாட்ஸ் அப் ஒன்று போதும்….!