க.சண்முகவடிவேல், திருச்சி
மேட்டூரில் இருந்து 1 லட்சம் கனஅடிக்கும் மேல் காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதால் திருச்சி, நாமக்கல் மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழந்திருக்கின்றது. மேலும் முக்கொம்புவில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதால் இருகரை தொட்டு தண்ணீர் ஆர்ப்பரிக்கின்றது. இதனால் கொள்ளிடம் கரையோரங்களில் வசித்து வந்தவர்கள் பாதிப்படைந்திருக்கின்றனர்.
மேலும், ஸ்ரீரங்கம் தாத்தாச்சாரியார் தோப்பு கிழக்கு பகுதி காவிரி அற்றில் 2010-ல் நபார்டு நிதி உதவியின் கீழ் கட்டப்பட்ட “தடுப்பு சுவர்” 1 அறை’ அடி அகல 50′ அடி நீளம் ஆற்று நீரின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் மண் அரிப்பு ஏற்பட்டு இடிந்து விழுந்தது. அங்கு ஏனைய தடுப்பு சுவர்களும் மண் அரிப்பால் பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஸ்ரீரங்கம் அகிலாண்டேஸ்வரி நகர் பின்புறம் உள்ள காவிரி கரையையொட்டிய சுமார் 50 அடி நீளமுள்ள தடுப்பு சுவர் விழுந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, நீர்வளத்துறை அதிகாரிகள் தகுந்த நடிவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதோடு பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, ஆட்சியருடன் ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழணியாண்டி, கோட்டாட்சியர், மாநகராட்சி உதவி ஆணையர், காவல்துறை உதவி ஆணையர், பொதுப்பணித்துறை பொறியாளர், வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், மேலூர் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் சென்று பார்வையிட்டு வெள்ள நீர் நகருக்குள் புகாதவாறு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”