உக்ரைனுக்கு துல்லியமாக தாக்கும் ராக்கெட் ஏவுகணைகளை அதிக எண்ணிக்கையில் அனுப்ப அமெரிக்கா உறுதி!

வாஷிங்டன்,

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலனா ஜெலன்ஸ்கா நேற்று அமெரிக்க பாராளுமன்றத்தில் எம்.பி.க்களிடையே உரையாற்றினார். அப்போது, அவர் பேசியதாவது:-

“துரதிர்ஷ்டவசமாக போர் முடிவுக்கு வரவில்லை. பயங்கரவாதம் தொடர்கிறது. இந்த போரில் கொல்லப்பட்டவர்கள் சார்பாகவும், கை கால்களை இழந்தவர்கள் சார்பாகவும், இன்னும் உயிருடன் இருப்பவர்கள் சார்பாகவும், போர் நடைபெறும் முன்களப் பகுதியில் இருந்து தங்கள் குடும்பத்தினர் திரும்ப வருவார்கள் என்ற நம்பிக்கையில் காத்திருப்பவர்கள் சார்பாக வேண்டுகோள் விடுக்கிறேன்.

நான் கேட்க விரும்பாத ஒன்றைக் கேட்கிறேன், ஆயுதங்களைக் கேட்கிறேன். ஏவுகணை தாக்குதலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளை கேட்கிறேன்” என்றார்.

இதனை அடுத்து, உக்ரைனுக்கு அதிக எண்ணிக்கையிலான துல்லியமான ராக்கெட் ஏவுகணைகளை அனுப்ப அமெரிக்கா உறுதியளித்துள்ளது.

உக்ரைனில் கிழக்கு தொழில்துறை பகுதியான டான்பாஸ் பகுதிகளை தன்வசம் கொண்டுவந்துள்ள ரஷியா, அவற்றையும் தாண்டி உக்ரேனின் பிற பகுதிகளை கைப்பற்றுவதை இலக்காகக் கொண்டிருப்பதாக தெரிவித்தது.

இந்த நிலையில், விரைவில் உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்புவதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.