நம்பமுடிகிறதா! உக்ரைன் ராணுவ வீரரின் உயிரை காத்த iPhone மொபைல்!

iPhone 11 Pro Stops Gunshot: நல்ல தரமான வடிவமைப்பு, கட்டுமானம் கொண்ட ஸ்மார்ட்போன் வேண்டும் என்றால், ஐபோன் தான் முன்னிலையில் இருக்கும். இதன் வலுவான கட்டமைப்பு குறித்து விளக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

ஆனால், இப்போது ஒரு முறை கூட ஐபோன் தன்னை நிரூபித்துள்ளது. ஆம், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், ராணுவ வீரர் ஒருவரின் உயிரை ஐபோன் காப்பாற்றியுள்ளது என்று சொன்னால் நம்பமுடிகிறதா. உண்மை இதுதான்.

ஆப்பிள் வாட்சுகள் எப்போதும் அதன் உடமையாளர்களை அவசர காலத்தில் பாதுகாக்கும் என்பதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், ஐபோன் 11 ப்ரோ இப்போது அதே வேலையை சிறப்பாக செய்துள்ளது.

Redmi K50i 5G: சூப்பர் அம்சங்களுடன் ரெட்மியின் முதல் அல்ட்ரா பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!

பாதுகாப்பு உடையாக மாறிய ஐபோன்

உக்ரைன் ராணுவ வீரர் அணிந்திருந்த கவச உடையில் வைக்கப்பட்டிருந்த ஐபோன் 11 ப்ரோ ஸ்மார்ட்போன், அவரின் உயிரை காப்பாற்றியுள்ளது. ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியதில், அவரின் மீது தோட்டா பாய்ந்துள்ளது.

ஆனால், கவச உடையையும் தாண்டிச் சென்ற அந்த தோட்டாவை ஐபோன் 11 ப்ரோ தடுத்துள்ளது. இது முதல் முறையல்ல. முன்னதாக ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஒரு ராணுவ வீரரின் உயிரைக் காத்துள்ளது.

ரெட்டிட்டில் பதிவு

Reddit இல் பகிரப்பட்ட ஒரு வீடியோ, உக்ரேனிய வீரர் ஒருவர் தனது பையிலிருந்த ஐபோனை வெளியே எடுப்பதைக் காட்டுகிறது. வீடியோ சேதமடைந்ததாக காணப்படுகிறது. அதில் தோட்டா தாக்கியதற்கான அறிகுறிகள் தென்படுகிறது.
வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்

நம்பமுடியாததாக தோன்றினாலும், ஐபோனின் 2019 மாடல் குண்டு துளைக்காத உடையாக செயல்பட்டுள்ளது. நினைவூட்டலாக, கார்னிங் கிளாஸ், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கட்டமைப்பு இதற்கு சான்றாக உள்ளது. பல சோதனைகளின் படி, ஐபோன் ஒரு உறுதியான ஸ்மார்ட்போனாகவே உலாவருகிறது.

Amazon Prime Day Sale 2022: சாம்சங், ஆப்பிள் என முன்னணி ஸ்மார்ட்போன்களை தள்ளுபடி விலையில் வாங்கலாம்!

இதுமட்டுமில்லாமல், ஆப்பிள் போன்களுக்கென பிரத்யேகமாக கொடுக்கப்பட்டுள்ள Find My iPhone அம்சம் பல வீரர்களுக்கு பயனுள்ளதாக இருந்துள்ளது. போரில் தொலைந்து போன போன்களை தேடி கண்டுபிடிக்க இது பெரிதும் உதவியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய லாக்டவுன் அம்சம்

ஆப்பிள் நிறுவனம் தனது தயாரிப்புகளை பாதுகாக்க லாக்டவுன் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. லாக்டவுன் பயன்முறை என்பது ஒரு புதிய பாதுகாப்பு அடுக்கு தொழில்நுட்பம் ஆகும். இது ஐபோன் பயனர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது.

ஐபோன் உடன் பிற ஆப்பிள் தகவல் சாதனங்கள் ஹேக்கர்களால் குறிவைக்கப்படுகின்றன. லாக்டவுன் பயன்முறையானது மனித உரிமை வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள், பிற விஐபிகளுக்கு போனில் புதிய பாதுகாப்பு அடுக்கைச் சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.