பெண்களை எப்படி கவர்வது? கூகுளில் அதிகம் தேடப்பட்ட கேள்வியும், அதற்கான பதில்களும்

ஒரு பெண்ணை எப்படி கவர்வது? பொதுவாக, பெண்களின் மனதில் இடம்பிடிக்க ஆண்கள் செய்யும் விஷயங்களில் மிகச் சிறிய விஷயங்களைப் புறக்கணிக்கிறார்கள், இங்குதான் அவர்கள் பெரிய தவறு செய்கிறார்கள். பெண்களை மகிழ்விப்பதற்கும், அவர்களின் இதயங்களை வெல்வதற்கும் நீங்கள் ஒவ்வொரு சிறிய விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டும். அதனால்தான் பல ஆண்கள் இந்த கடினமான டாஸ்கை சமாளிக்க, எளிதான வழியை கூகுளில் தேடுகிறார்கள்.

உங்கள் துணையை மகிழ்விப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் சில ஸ்பெஷல் டிப்ஸ்களை இன்று நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.

பேலன்ஸ்

ஒரு பையனுடன் பேசும்போது எப்படி உணர்கிறோம் என்பது எந்தவொரு பெண்ணும் கவனிக்கும் மிக முக்கியமான விஷயம். பெண்கள் முதலில் எந்த ஆணிடமும் நகைச்சுவை உணர்வைப் பார்க்கிறார்கள். அதனால்தான் பெண்ணிடம் பேசும்போது சிரிப்பை வரவழைக்க முயற்சி செய்யுங்கள்.

ஆனால், நீங்கள் சீரியசான விஷயங்களுக்கும், லேசான விஷயங்களுக்கும் இடையில் ஒரு பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும். பெண்ணுடன் சீரியஸாக இருப்பது அல்லது கேலி மட்டுமே செய்வது உங்கள் மீதான அவளின் அபிப்ராயத்தை கெடுத்துவிடும்.

இந்த இரண்டு விஷயங்களுக்கிடையில் நீங்கள் சமநிலையை ஏற்படுத்தினால், பெண்கள் உங்களுடன் பேச அதிக ஆர்வம் காட்டுவார்கள். பெண் உங்களுடன் இருக்கும்போது சோகமாக இருக்காதீர்கள், பதிலாக அவளை சிரிக்க வையுங்கள்.

மரியாதை கொடுங்கள்

ஒவ்வொரு பெண்ணும்’ தான் மதிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். எந்தவொரு பெண்ணும், தனது துணையிடம் இந்த குணத்தை கண்டிப்பாக பார்க்கிறாள், ஒரு பையன் பெண்ணுக்கு எவ்வளவு மரியாதை கொடுக்கிறான் என்பது மிகவும் முக்கியம்.

எனவே பெண்ணைக் கவர, அவளுக்கு முழு மரியாதை கொடுக்க வேண்டும். பெண்களை மதிக்கும் ஆண்களை பெண்கள் பெரும்பாலும் விரும்புவதற்கு இதுவே காரணம். அத்தகைய ஆண்கள் ஒரு பெண்ணின் இதயத்திற்குள் நுழையும் வழியை எளிதில் கண்டுபிடிக்க முடியும். அவள் உங்களுக்கு எவ்வளவு ஸ்பெஷல் என்பதை வார்த்தைகளில் சொல்வதற்கு பதிலாக, அவள் உணரும்படி நடந்து கொள்ளுங்கள்.

நம்பிக்கை

Romantic lovers with eiffel tower

நீங்கள் எவ்வளவு நம்பிக்கையுடன் இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு அந்தப் பெண் உங்கள் மீது ஈர்க்கப்படுவார். ஒவ்வொரு பெண்ணும் தன்னம்பிக்கையுள்ள ஆண்களை விரும்புகிறார்கள். தன்னம்பிக்கையுடன் எந்த ஒரு வேலையையும் செய்ய நீங்கள் எப்போதும் தயாராக இருந்தால், இந்த விஷயம் பெண்ணை உங்கள் பக்கம் ஈர்க்கும்.

பெண்கள் அவர்களுடன் பேசும்போது, அவர்கள் பதட்டமாக இருந்தாலும் அல்லது நம்பிக்கையாக இருந்தாலும் சரி, உடனடியாக ஆண்களின் நம்பிக்கையை அளவிடுகிறார்கள். ஆனால் உங்கள் அதீத நம்பிக்கை அனைத்தையும் கெடுத்துவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது மட்டுமல்ல,  உங்கள் முடிவெடுக்கும் திறனையும் பெண்கள் மதிப்பிடுவார்கள். உங்கள் நம்பிக்கையையும், முடிவெடுப்பதையும் ஒரு பெண் கவனித்தால், அவள் நிச்சயமாக உங்களை விரும்புவாள்.

நல்ல லுக்

ஒரு பையன் ஒரு ஃபேஷன் ஃப்ரீக்காக இருக்க வேண்டும் என்று ஒரு பெண் எதிர்பார்ப்பதில்லை. ஆனால் பையன் எதை அணிந்தாலும் தன்னம்பிக்கையோடும், ஸ்டைலோடும் அணிய வேண்டும் என்று அவள் கண்டிப்பாக விரும்புகிறாள். அதனால்தான் மிகவும் டிசண்ட் லுக்கில் இருக்கும் ஆண்களை, பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள். உங்கள் தோற்றம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு ஒரு பெண் உங்கள் சுகாதாரத்தையும் கவனிக்கிறார்.

எனவே உங்களை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக முடி, தாடி மற்றும் நகங்களை சுத்தமாக வைத்திருங்கள். உங்களிடமிருந்து வியர்வை வாசனை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். மிகவும் லேசான வாசனை திரவியத்தை பயன்படுத்தவும்.

பொறுப்பு

ஒவ்வொரு பெண்ணும் தன் துணையுடன் எதிர்காலத்தை வைத்து பார்க்க விரும்புகிறாள். தங்கள் வேலை மற்றும் தொழிலில், சீரியஸாக இருக்கும் ஆண்களை, பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள்.

உங்களின் பொறுப்பின்மையும், சோம்பேறித்தனமும் அந்தப் பெண்ணை எப்பொழுதும் உங்களை விட்டு ஓட வைக்கும். பெண் உங்கள் சம்பளம் மற்றும் அந்தஸ்து பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை என்பதும் உண்மைதான், உங்கள் தொழிலைப் பற்றிய உங்கள் சீரியஸ்னெஸ், எந்த வேலையிலும் மெச்சூரிட்டி ஆகியவற்றை அவள் கவனிக்கிறாள்.

இவற்றையெல்லாம் உங்களால் உங்களுக்குள் கொண்டு வர முடிந்தால், அந்தப் பெண் உங்களை விரும்புவதோடு, உங்களோடு சேர்ந்து தனது எதிர்காலத்தையும் வைத்து பார்ப்பார்.

காது கொடுத்து கேளுங்கள்

பெண்கள் இயல்பிலேயே மிகவும் சென்சிட்டிவ், எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். பெண்கள் தங்கள் சிறந்த தோழிகளிடம் கூட பல விஷயங்களைச் சொல்வதில்லை. சின்னச் சின்ன விஷயங்கள் கூட அவர்களைத் தொந்தரவு செய்யும்.

அவள் யாரிடமாவது பகிர்ந்து கொள்ள விரும்பும் பல விஷயங்கள் அவள் இதயத்தில் இருப்பதற்கு இதுவே காரணம். எனவே, ஒரு பெண் உங்களுடன் பேசும்போது, ​​​​அவளுடைய பிரச்சனையைச் சொன்னால், அவள் சொல்வதை கவனமாகக் கேளுங்கள். அவள் சொல்லும் விஷயத்தில் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதோ, இல்லையோ அவள் சொல்வதை மட்டும் கேளுங்கள்.

இப்படிச் செய்தால் அவளுக்குப் பிடித்தமானவராக மாறலாம். அவள் பேசும்போது அவளை ஒருபோதும் கட் செய்யக்கூடாது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

அடுத்தமுறை பெண்களின் மனதில் இடம்பிடிக்கும் போது, இந்த டிப்ஸ்களை கண்டிப்பாக மனதில் வைத்துக் கொள்ளுங்கள்..

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.