ரிஷி சுனக் சொத்து மதிப்பு இவ்வளவா? எப்படி இவ்வளவு பெரிய செல்வந்தர் ஆனார்?

இங்கிலாந்து நாட்டின் முன்னாள் நிதி அமைச்சரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ரிஷி சுனக் இன்னும் ஓரிரு நாளில் இங்கிலாந்து நாட்டின் பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து நாட்டின் பிரதமர் பெயர் பட்டியலில் அவரது பெயர் முன்னணியில் இருப்பதாகவும் அவர் பிரதமராக தேர்வு செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மதுரை, திருநெல்வேலி-க்கு ஜாக்பாட்.. அடுத்தடுத்து வரும் 3 ஐடி நிறுவனங்கள்..!

இந்த நிலையில் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி ஆகியோர்களின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரிஷி சுனக்

ரிஷி சுனக்

ரிஷி சுனக் ஒரு இந்திய வம்சாவளி இங்கிலாந்து அரசியல்வாதி ஆவார். அவர் தற்போது இங்கிலாந்து நாட்டின் அடுத்த பிரதமர்பதவிக்கான பெயர் பட்டியலில் ஒருவராக உள்ளார். அவர் தற்போது பென்னி மோர்டான்ட் மற்றும் லிஸ் ட்ரஸ் ஆகியோருக்கு எதிராக போட்டியிடுகிறார்.

இங்கிலாந்தின் பணக்காரர்

இங்கிலாந்தின் பணக்காரர்

இங்கிலாந்தின் முன்னாள் நிதியமைச்சர், சுனக் 2015 ஆம் ஆண்டு முதல் கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினராக பணியாற்றி வருகிறார். இங்கிலாந்தில் உள்ள பணக்காரர்கள் பட்டியலில் அவர் இடம்பிடித்ததால், அவரது நிகர சொத்து மதிப்பு குறித்து அறிய மக்கள் அதிக ஆர்வமாக உள்ளனர்.

ரிஷி சுனக்கின் சொத்து மதிப்பு
 

ரிஷி சுனக்கின் சொத்து மதிப்பு

ரிஷி சுனக் போரிஸ் ஜான்சனை மாற்றக்கூடிய ஒரு சாத்தியமான வேட்பாளராக மட்டுமல்லாமல், அவரது நிதி செல்வத்தின் காரணமாகவும் அடிக்கடி ஊடகங்களின் தலைப்பு செய்திகளில் இடம் பெற்று வருகிறார். இந்த ஆண்டு, சண்டே டைம்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி ஆகியோர் 730 மில்லியன் பவுண்டுகள் நிகர சொத்து மதிப்புடன் இருப்பதாக தெரிவித்து இருந்தது.

எத்தனை சொந்த வீடுகள்?

எத்தனை சொந்த வீடுகள்?

ரிஷி சுனக், 1989 ஆம் ஆண்டில் இருந்தே பணக்காரர் பட்டியலில் இடம்பெற்ற முதல் முன்னணி அரசியல்வாதி என்று கூறப்படுகிறது. இந்திய வம்சாவளி தம்பதியினர் லண்டனில் 15 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள நான்கு வீடுகள், யார்க்ஷயரில் ஒரு வீடு மற்றும் சில வீடுகள் வெளிநாடுகளிலும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சொத்துக்கள் அனைத்தும் ஏக்கர் கணக்கில் பரந்து விரிந்து கிடக்கின்றன.

ரிஷி சுனக் வாழ்க்கைப் பாதை

ரிஷி சுனக் வாழ்க்கைப் பாதை

1980 ஆம் ஆண்டு சவுத்தாம்ப்டனில் ரிஷி சுனக் பிறந்தார். கலிபோர்னியா ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முடித்த பிறகு, அக்ஷதா மூர்த்தியை சந்தித்தார். அவர் கோல்ட்மேன் சாக்ஸ் என்ற முதலீட்டு வங்கியிலும் பணியாற்றினார், பின்னர் இரண்டு ஹெட்ஜ் நிதிகளிலும் பங்குதாரரானார்.

இங்கிலாந்து அரசியல்

இங்கிலாந்து அரசியல்

ரிஷி சுனக் கடந்த 2015ஆம் ஆண்டில் இங்கிலாந்து அரசியல் களத்தில் நுழைந்தார். அரசியலில் அவர் மேல்நோக்கியே நகர்ந்தார். படிப்படியாக உயர்ந்து போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் நிதியமைச்சர் பதவியையும் பெற்றார்.

பணக்காரர் பட்டியலில் இடம்

பணக்காரர் பட்டியலில் இடம்

சுனக் தனது வாழ்நாளில் நல்ல வருமானத்தை பெற்றிருந்தாலும் அவரது செல்வத்தின் பெரும்பகுதி அக்ஷதா மூர்த்தியை 2009ஆம் ஆண்டில் அவர் திருமணம் செய்துகொண்ட பிறகே அதிகரித்ததாக கூறப்படுகிறது. அக்ஷதா மூர்த்தி, இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் மகள் ஆவார். அவர் இந்தியாவின் ஆறாவது பெரிய பணக்காரர் ஆவார். நாராயண மூர்த்தியின் வணிகத்தில் அவரது வாரிசானஅக்ஷதாவுக்கு பெரிய பங்குகள் உள்ளன. மேலும் அவர் அக்ஷதா டிசைன்ஸ் என்ற ஃபேஷன் லேபிளின் உரிமையாளராகவும் உள்ளார்.

வரி சர்ச்சை

வரி சர்ச்சை

இந்திய ஐடி நிறுவனத்தில் £690 மில்லியன் பங்குகளில் இருந்து பெறும் வருடாந்திர ஈவுத்தொகைக்கு சட்டப்பூர்வமாக வரி செலுத்தவில்லை என அக்ஷதா மூர்த்தி மீது சர்ச்சை எழுந்தபோது அவர் எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் வரி செலுத்த ஒப்புக்கொண்டார்.

நாட்டை வழிநடத்தும் திட்டம்

நாட்டை வழிநடத்தும் திட்டம்

பிரதமர் வேட்பாளர் ஆனதும் ரிஷி சுனக் கூறியபோது, நம் நாட்டை வழிநடத்தும் திட்டம் என்னிடம் உள்ளது என்றும், பணவீக்கத்தை கட்டுப்படுத்தி மக்களின் வரிச்சுமையை குறைப்பேன் என்றும் அவர் இங்கிலாந்து நாட்டு மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார். இதுதான் அவரை பிரதமர் பதவிக்கான பெயர் பட்டியலில் முன்னிலைக்கு கொண்டு சென்றுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

The Net Worth of Rishi Sunak, How He Entered England Richers list?

The Net Worth of Rishi Sunak, How He Entered England Richers list?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.