பிட்காயின்-ஐ கைகழுவும் டெஸ்லா.. எலான் மஸ்க் கனவு உடைந்தது..!

உலகளவில் கிரிப்டோகரன்சி மற்றும் பிட்காயினை ஆதரிக்கும் முக்கியமான தொழிலதிபர்களில் ஒருவர் எலான் மஸ்க் இவர் தான் டோஜ்காயினின் தந்தை எனவும் பெருமையாகக் கூறுவர். எலான் மஸ்க் ஆரம்பத்தில் இருந்து நாணயங்களுக்குப் பதிலாக கிரிப்டோகரன்சியை பயன்படுத்துவதற்கு ஆதரவு அளித்து வந்தார்.

இதன் முதல் படியாக எலான் மஸ்க் தலைமை வகிக்கும் டெஸ்லா நிறுவனத்தில் பிட்காயினை பேமெண்ட் ஆக ஏற்றுக்கொண்டு கார்களை வாங்கும் திட்டத்தை அறிமுகம் செய்தார், சில நாட்களிலேயே இத்திட்டம் நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து எலான் மஸ்க் நிர்வாகம் செய்யும் டெஸ்லா நிறுவனம் 1 பில்லியன் டாலருக்கும் அதிகமாக பிட்காயினை வெளி சந்தையில் நேரடியாக வாங்கியது அனைவருக்கும் தெரியும்.

உலகிலேயே கிரிப்டோகரன்சியில் அதிகம் முதலீடு செய்த நிறுவனங்களில் ஒன்றாக இருந்த டெஸ்லா தற்போது முக்கியமான முடிவை எடுத்துள்ளது.

3 பக்கமும் அடிவாங்கும் கிரிப்டோகரன்சி.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..!

டெஸ்லா

டெஸ்லா

அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தால் உலக நாடுகளின் நாணயங்கள் சரிந்து வருவது போல் பிட்காயின் உட்பட பெரும்பாலான கிரிபிடோகரன்சி தொடர்ந்து சரிந்து முதலீட்டாளர்கள் பாக்கெட்டில் பெரிய ஒட்டையைப் போட்டது. இந்த நிலையில் டெஸ்லா நிறுவனத்தின் நிர்வாகம் முக்கியமான முடிவை எடுத்துள்ளது, இதன் மூலம் எலான் மஸ்க் கனவு திட்டம் உடைந்துள்ளது.

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

எலான் மஸ்க் கிரிப்டோகரன்சி உற்பத்தியில் பசுமை மின்சாரத்தை பயன்படுத்த துவங்கிய பின்னர் டெஸ்லா நிறுவனத்தில் முன்னணி கிரிப்டோகரன்சியை பேமெண்ட் ஆக அறிவிக்கத் திட்டமிட்டு இருந்தார் எலான் மஸ்க். ஆனால் தற்போது டெஸ்லா நிர்வாகம் பிட்காயின் இருப்பை மொத்தமாகத் தீர்க்க உள்ளது.

75 சதவீதம் விற்பனை
 

75 சதவீதம் விற்பனை

ஏப்ரல் முதல் ஜூன் 30 வரையிலான காலகட்டத்தில் டெஸ்லா தனது மொத்த பிட்காயின் இருப்பில் தோராயமாக 75 சதவீதத்தை விற்றுள்ளதாக புதன்கிழமை தெரிவித்துள்ளது. ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் பிட்காயின் விற்பனை மூலம் 936 மில்லியன் டாலர் மதிப்புள்ள கிரிப்டோகரன்சியை பணமாக மாற்றியதாகக் கூறியுள்ளது.

 1.5 பில்லியன் டாலர் முதலீடு

1.5 பில்லியன் டாலர் முதலீடு

பிப்ரவரி 2021 இல் கிரிப்டோகரன்சி-யில் 1.5 பில்லியன் டாலர் முதலீட்டை டெஸ்லா அறிவித்தபோது கிரிப்டோ சந்தையில் அலைகளை உருவாக்கியது. மேலும் பிட்காயின் விலையை விண்ணை முட்டும் அளவிற்கு இந்த முதலீடுகள் உதவியது மறுக்க முடியாத உண்மை.

பிட்காயின் விலை

பிட்காயின் விலை

பிட்காயின் கடந்த 24 மணிநேரத்தில் 4 சதவீதம் சரிந்து 22,806.85 டாலராக உள்ளது, சில நாட்களுக்கு முன்பு பிட்காயின் 19000 டாலர் வரையில் சரிந்தது மறக்க முடியாத ஒன்றாக உள்ளது. எலான் மஸ்க் டெஸ்லா பங்குகளை அதிகளவில் விற்பனை செய்த இந்த நேரத்தில் கிரிப்டோகரன்சி இருப்பை பெரிய அளவில் குறைத்து பணமாக்கியுள்ளது டெஸ்லா.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Tesla sold 75 percent of its bitcoin; cashed out 936 million dollar in 3 months

Tesla sold 75 percent of its bitcoin; cashed out 936 million dollar in 3 months பிட்காயின்-ஐ கைகழுவும் டெஸ்லா.. எலான் மஸ்க் கனவு உடைந்தது..!

Story first published: Thursday, July 21, 2022, 14:48 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.