சென்டர் ஃபார் மானிட்டரிங் இந்தியன் எகானமி (CMIE) அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகள் படி நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் ஜூன் மாதத்தில் 7.8 சதவீதமாக அதிகரித்துள்ளது, இது மே மாதத்தில் 7.12 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கிராமப்புற வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பால் ஜூன் மாதத்தில் பெரும் பாதிப்புக்கு வழிவகுத்துள்ளது. கிராமப்புற வேலைவாய்ப்பின்மை அளவீடு மே மாதத்தில் 6.62 சதவீதத்தில் இருந்து ஜூன் மாதத்தில் 8.03 சதவீதமாக உயர்ந்தது.
அதே நேரத்தில் நகர்ப்புற வேலையின்மை ஜூன் மாதத்தில் 8.21 சதவீதத்திலிருந்து 7.30 சதவீதமாகக் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பின்மை அளவு என்ன தெரியுமா..?
மதுரை, திருநெல்வேலி-க்கு ஜாக்பாட்.. அடுத்தடுத்து வரும் 3 ஐடி நிறுவனங்கள்..!
டாப் 10 மாநிலங்கள்
வேலைவாய்ப்பின்மையில் மோசமாக இருக்கும் டாப் 10 மாநிலங்கள்
ஹரியானா – 30.6 சதவீதம்
ராஜஸ்தான் – 29.8 சதவீதம்
அசாம் – 17.2 சதவீதம்
ஜம்மு & காஷ்மீர் – 17.2 சதவீதம்
பீகார் – 14 சதவீதம்
சிக்கிம் – 12.7 சதவீதம்
ஜார்கண்ட் – 12.2 சதவீதம்
டெல்லி – 10.3 சதவீதம்
ஹிமாச்சல பிரதேசம் – 10.3 சதவீதம்
தெலுங்கானா – 10 சதவீதம்
பெஸ்ட் 5 மாநிலங்கள்
வேலைவாய்ப்பின்மை அளவீட்டில் மிகவும் குறைவாக இருக்கும் டாப் 5 மாநிலங்கள்
தமிழ்நாடு – 2.1 சதவீதம்
சத்தீஸ்கர் – 1.2 சதவீதம்
ஒடிசா – 1.2 சதவீதம்
புதுச்சேரி – 0.8 சதவீதம்
மத்திய பிரதேசம் – 0.5 சதவீதம்
பிற மாநிலங்கள்
திரிபுரா – 9.4 சதவீதம்
உத்தரகாண்ட் – 8.7 சதவீதம்
பஞ்சாப் – 8.5 சதவீதம்
கோவா – 5.5 சதவீதம்
கேரளா – 5.3 சதவீதம்
மேற்கு வங்காளம் – 5.2 சதவீதம்
மகாராஷ்டிரா – 4.8 சதவீதம்
ஆந்திரப் பிரதேசம் – 4.4 சதவீதம்
கர்நாடகா – 3.7 சதவீதம்
குஜராத் – 3 சதவீதம்
உத்தரப்பிரதேசம் – 2.8 சதவீதம்
மேகாலயா – 2.3 சதவீதம்
இந்திய பொருளாதாரம்
சர்வதேச சந்தையின் தாக்கத்தால் இந்திய பொருளாதாரம், வர்த்தகம், முதலீட்டுச் சந்தை, வேலைவாய்ப்பு எனப் பல துறைகள் அதிகப்படியான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக வல்லரசு நாடுகளில் நிலவரம் ரெசிஷன் அச்சம் பெரும் பாதிப்பை இந்தியாவுக்கு உருவாக்கி வருகிறது.
ஜூன் மாத தரவுகள்
இந்தச் சூழ்நிலையில் ஜூன் மாதத்தில் இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை, சேவைத்துறை பிஎம்ஐ குறியீடு, ரூபாய் மதிப்பு, வர்த்தகப் பற்றாக்குறை தரவுகள் ஆகியவை முதலீட்டுச் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
வேலைவாய்ப்பின்மை விகிதம்
CMIE தரவுகளின்படி, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் புதிய வேலைவாய்ப்பு எண்ணிக்கை 8 மில்லியனாக அதிகரித்து ஜூன் மாதத்தில் 13 மில்லியன் குறைந்து 390 மில்லியனாக உள்ளது. இதன் மூலம் வேலைவாய்ப்பின்மை விகிதம் ஜூன் மாதத்தில் 7.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.
CMIE அமைப்பு
இந்த மாதத்தில் கிட்டத்தட்ட 13 மில்லியன் வேலைகள் இழக்கப்பட்டாலும், தொழிலாளர் சந்தையில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 3 மில்லியன் மட்டுமே உயர்ந்துள்ளது என்று CMIE இன் நிர்வாக இயக்குனர் மகேஷ் வியாஸ் கூறுகிறார்.
State-Wise unemployment rate in June 2022; Check Tamilnadu Status, Haryana and Rajasthan in bad Shape
State-Wise unemployment rate in June 2022; Check Tamilnadu Status, Haryana and Rajasthan in bad Shape தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பின்மை அளவு எவ்வளவு தெரியுமா..? ஹரியானா, ராஜஸ்தான் படுமோசம்..!