உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்…

உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கும் படம் ‘மாமன்னன்’.

வில்லனாக ஃபஹத் பாசில் நடிக்கிறார் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது.

நீண்ட இடைவெளிக்குப் பின் வடிவேலு இந்தப் படத்தில் நடிக்கிறார்.

உதயநிதிக்கு அப்பாவாக அவர் நடிப்பதாகவும் இந்த கதாபாத்திரம் நீண்ட நாள் பேசக்கூடிய கதாபாத்திரமாக இருக்கும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார் செல்வா ஆர்.கே படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.

பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கும் மூன்றாவது படமான மாமன்னன் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.