எனது விந்தணுவுக்கு தேவை அதிகமுள்ளது! பரபரப்பை கிளப்பிய எலான் மஸ்க்கின் 76 வயது தந்தை


தனது விந்தணுவுக்கு தேவை அதிகமுள்ளதாகவும், பணக்கார பெண்கள் கருவுற அதனை விற்க தயாராக உள்ளதாகவும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கின் தந்தை எர்ரோல் மஸ்க் தெரிவித்துள்ளார்.

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனரான எலன் மஸ்க் ட்விட்டரை வாங்குவதாக அறிவித்தது பரபரப்பானது. இந்த அவரது தந்தை எர்ரோல் மஸ்க்(76 ) கூறியுள்ள விடயம் அனைவரின் புருவத்தையும் உயர வைத்துள்ளது.

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், கொலம்பியாவில் உள்ள நிறுவனம் ஒன்று தனது விந்தணுவை தானம் செய்யும் வாய்ப்பை வழங்கியதாக தெரிவித்தார்.

அதற்கான காரணத்தை அவர் கூறியது தான் விமர்சனங்களை சந்தித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய பணக்காரர் ஆக்கிய மரபணுக்களை தான் கொண்டுள்ளதால் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டதாக எர்ரோல் மஸ்க் குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், ‘உயர்தரப் பெண்களை கருவுறச் செய்ய, விந்தணு தானம் செய்ய விரும்பும் ஒரு நிறுவனம் என்னிடம் உள்ளது.

அவர்கள் என்னிடம், எலோனை உருவாக்கிய நீங்கள் இருக்கும்போது நாங்கள் ஏன் அவரிடம் செல்ல வேண்டும் என கேள்வி எழுப்பினர்.

Errol Musk

PC: Samantha Lowe

அவர்கள் எனக்கு எந்த பணமும் வழங்கவில்லை. ஆனால் எனக்கு முதல் வகுப்பு பயணம், ஐந்து நட்சத்திர ஹொட்டலில் தாங்கிக்கொள்ளுதல் மற்றும் தேவைப்படும் அனைத்து வகையான பொருட்களையும் வழங்குவதாக கூறியுள்ளனர்’ என தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் 9வது குழந்தைக்கு தந்தையான எலான் மஸ்க், பிறப்பு விகிதம் சரிந்து வருவதால் மனிதகுலம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய ஆபத்து இது எனவும், மக்கள்தொகை நெருக்கடிக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்வதாகவும் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.    

Elon Musk

ndtv



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.