திருப்பூர் மாவட்டத்தில் இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சேகம்பாளையம் சாய் குரு கார்டன் நகரை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் தொழிலாளி நவீன்(20).
இந்நிலையில் நேற்று நவீன் வீட்டில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நவீனின் தந்தை, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் நவீனை மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே நவீன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறியும் வந்த பல்லடம் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.