தமிழ் சினிமாவில் ஹாட் காதல் ஜோடியாக வலம் வந்த நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஜூன் 9-ந் தேதி திருமணம் செய்துகொண்டனர். சென்னை மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்தி ஹோட்டலில் நடைபெற்ற இந்த திருமணத்தில் உறவினர்கள் மற்றும் திரைத்துரையின் முக்கி பிரமுகர்கள் மட்டுமே பங்கேற்றனர்
மேலும் திருமணத்திற்கு வருபவர்கள் செல்போன் கொண்டுவரக்கூடாது என பல தடைகள் விதிக்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் பிரபல ஒடிடி தளமான நெட்.ஃபிளிக்ஸ் விக்கி நயன் திருமணத்தை ஒளிபரப்பும் உரிமத்தை ரூ 25 கோடிக்கு பெற்றுள்ளதாக கூறப்பட்டது. மேலும் இந்த திருமணத்தில் நெட்ஃபிளிக்ஸ் உணவு உட்பட விழாவின் முக்கிய தேவைகளுக்கு செலவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
இதனால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற இந்த திருமணத்தில் புகைப்படங்கள் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டது. ஆனாலும் திருமணம் முடிந்தவுடன் இயக்குநர் விக்னேஸ் சிவன் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவியது.
இதனைத் தொடர்ந்து நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் திருமணம் எப்போது ஒளிபரப்பாகும் என்று விக்கி நயன் மட்டுமல்லாது ரசிகர்களும் காத்திருக்கும் நிலையில், ஒரு மாதத்திற்கு மேலாகியும் ஒளிபரப்பாகவில்லை. இதனிடையே திருமணமாகி ஒரு மாதம் ஆனதை கொண்டாடும் வகையில் திருமணத்திற்கு வந்த பிரபலங்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டார் விக்னேஷ் சிவன்.
புகைப்படங்கள் வெளியானதால் திருமணம் ஒளிபரப்பும் உரிமைக்கான ஒப்பந்தைத்தை விக்கி நயன் தம்பதி மீறிவிட்டதாகவும். இதனால் இந்த ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்குவதாகும் திருமணத்திற்கு செலவு செய்த பணத்தை கேட்டு நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் விக்கி – நயன் இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்பட்டது.
ஆனால் இது உண்மையில்லை என்பதை உறுதி செய்யும் வகையில் தற்போது சில தகவல்கள் வெளியாகி வருகிறது. இதில் விரைவில் விக்கி நயன் திருமணம் தொடர்பான வீடியோவை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ஒளிபரப்ப உள்ளதாகவும், இதில் நயன்தாராவின் வழ்க்கை பயணம் இடம்பெறும் என்றும், விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், நயன் விக்கி திருமணம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பாகுமா ஆகாதா என்று ரசிகர்கள் யோசனையில் ஆழ்ந்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“