பாராளுமன்ற ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக முன்னின்ற திரு.டலஸ் அழகப்பெரும புதிய ஜனாதிபதிக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
எண்ணிக்கையில் தோல்வியடைந்த நான் தனது அரசியல் சித்தாந்தத்தில் தோற்கவில்லை என்று அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
அதற்குக் காரணம், தியவன்னாவ தீவில் உள்ள 225 குடும்பங்களுக்குப் பதிலாக, தீவுக்கு வெளியே உள்ள 58 இலட்சம் குடும்பங்களுக்காகவும் முன் நின்றமையே ஆகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். தன்மீது நம்பிக்கை வைத்துள்ள அனைத்து கட்சிகள் மற்றும் உறுப்பினர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை மேற்கொண்டே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.