இளவரசர் சார்லசின் தனிப்பட்ட உதவியாளராகவும், இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹரியை கவனித்துக்கொள்பவராகவும் இருந்த ஒரு பெண்ணுக்கும் சார்லசுக்கும் தவறான உறவு இருந்ததாக வெளியான தகவல் தொடர்பில் பிரபல ஊடகமான பிபிசி மன்னிப்புக் கோரியுள்ளது.
1995ஆம் ஆண்டு, பிரித்தானிய இளவரசி டயானா பிபிசி தொலைக்காட்சிக்கு ஒரு பேட்டியளித்தார்.
அந்த பேட்டியில் அவர் தெரிவித்த விடயங்கள், இளவரசர் சார்லஸ் முதல் பலருக்கு பெரும் பிரச்சினைகளை உருவாக்கி, இறுதியில், இளவரசி டயானாவின் மரணத்துக்கும் வழிவகுத்துவிட்டன எனலாம்.
அந்த பேட்டியில்தான் டயானா தனது கணவரான இளவரசர் சார்லசுக்கு கமீலா பார்க்கர் என்ற பெண்ணுடன் தவறான உறவு இருப்பதாக, உலகமே பார்க்க தொலைக்காட்சியில் பேட்டியளித்தார். அந்த பேட்டி, ராஜ குடும்பத்துக்கு பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியது.
Credit: News Group Newspapers Ltd
அந்த பேட்டியை ஏற்பாடு செய்வதற்காக மார்ட்டின் பஷீர் என்னும் பிபிசி ஊடகவியலாளர் இளவரசி டயானாவை அணுக முயன்றிருக்கிறார். அவரை நேரடியாக எளிதாக அணுக முடியாது என்பதால் டயானாவின் சகோதரரான சார்லஸ் ஸ்பென்சர் என்பவரை அணுகிய பஷீர், அவர் மூலமாக டயானாவின் நம்பிக்கையை பெறுவதற்காக, டயானாவின் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுவதாகவும், இளவரசர் சார்லசுக்கும் அவரது தனிப்பட்ட உதவியாளராகவும், இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹரியை கவனித்துக்கொள்பவராகவும் இருந்த டிகி (Tiggy Legge-Bourke என்னும் Alexandra Pettifer) என்ற பெண்ணுக்கும் தவறான உறவு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தனது குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்காக போலி ஆவணங்களையும் தயார் செய்துள்ளார் பஷீர். இந்த விடயங்கள் தெரியவந்ததைத் தொடர்ந்துதான் உணர்ச்சி வசப்பட்ட டயானா, தனது அந்தரங்க விடயங்கள் அனைத்தையும் தொலைக்காட்சி பேட்டியில் வெளிப்படையாகக் கூறிவிட்டார்.
கடந்த ஆண்டு, பஷீர் தன்னிடம் கொடுத்த ஆவணங்களை ஸ்பென்சர் விசாரணைக் கமிஷன் ஒன்றின் முன் சமர்ப்பிக்க, விசாரணை ஒன்று துவக்கப்பட்டது.
அந்த விசாரணையில் பஷீர் கூறிய விடயங்கள் பொய், அவர் சமர்ப்பித்த ஆவணங்கள் போலியானவை என தெரியவந்தது.
இன்று, பிபிசி நிறுவனம், இளவரசர் சார்லசுடன் தவறான உறவு வைத்துக்கொண்டதாக பஷீர் கூறிய டிகி என்ற அலெக்சாண்ட்ராவிடம் லண்டன் உயர்நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.
Credit: PA
அத்துடன், டிகிக்கு கணிசமான தொகை ஒன்றை இழப்பீடாக வழங்குவதாகவும் பிபிசி நிறுவனம் தெரிவித்துள்ளது. தாங்கள் அந்த பேட்டி ஒளிபரப்பாகும் முன்பே உண்மை நிவரங்களை விசாரித்திருக்கவேண்டும் என்று கூறியுள்ள பிபிசி, இளவரசர்கள், சார்லஸ், வில்லியம் மற்றும் ஹரி ஆகியோரிடமும் மன்னிப்புக் கோரியுள்ளது.
நாங்கள் எங்கள் வேலையை சரியாக செய்திருந்தோமானால், இளவரசி டயானா உயிருடன் இருந்தபோதே இந்த உண்மை அவருக்குத் தெரியவந்திருக்கும், நாங்கள் அவருக்கும், ராஜ குடும்பத்துக்கும், எங்கள் நேயர்களுக்கும் கூட ஏமாற்றமளித்துவிட்டோம் என்று கூறியுள்ளார் பிபிசி தொலைக்காட்சியின் இயக்குநர் ஜெனரலான Tim Davie.
Credit: PA
Credit: Getty – Contributor