திரைப்படங்களை விட தற்போது சின்னத்திரை நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அவர்களுக்காக ரசிகர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் பல நடிகைகள் பட வாய்ப்பு கிடைத்து சினிமாவில் நடித்து வருகின்றனர்.
அந்த வகையில் விஜய் டிவியின் பிரிவோம் சந்திப்போம் சீரியல் தொடங்கி சமீபத்தில் நிறைவடைந்த நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட பல சீரியல்களில் முக்கிய கேரக்டரில் நடித்து பிரபலமானவர் ரச்சிதா மகாலட்சுமி. இதில் சரவணன் மீனாட்சி சீசன் 2 மற்றும் சீசன் 3 இவரை ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பிரபலப்படுத்தியது.
தற்போது கலர்ஸ் தமிழின் இது சொல்ல மறந்த கதை தொடரில் நடித்து வருகிறார். மேலும் தமிழில் உப்பு கருவாடு கன்னடத்தில் பாரிஜாதா உள்ளிட்ட படங்களில் நடித்த ரச்சிதா தற்போது கன்னடத்தில் ரங்கநாயகா என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் ரச்சிதா கடந்த 2015-ம் ஆண்டு தன்னுடன் பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரில் நாயகனாக நடித்த தினேஷ் என்பரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் தற்போது கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், விரைவில் விவாகரத்து செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.
மேலும் ரச்சிதா அடுத்து 2வது திருமணத்திற்கு தயாராகிவிட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. மேலும் தினெஷ் கடைசியாக ரச்சிதாவுடன் இணைந்து நாச்சியாபுரம் என்ற சீரியலில் நடித்தார். ஜீ தமிழில் ஒளிபரப்பான இந்த சீரியல் கடந்த 2020-ம் நிறைவடைநத நிலையில், அப்போதிருந்து ரச்சிதா கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போது தினேஷ் மீண்டும் சன் டி.வி சீரியலில் ரீ-எண்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், சமீபத்தில் நடைபெற்ற சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலில், தினேஷ் இணைச்செயலாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தல் வெற்றி தொடர்பாக சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்த நடிகர் தினேஷ் நடிகை ரச்சிதா பற்றி பேசியுள்ளார்.
அதில், எங்கள் வாழ்க்கையில் அசாதரணமாக நாட்கள் நகர்ந்துகொண்டிருக்கிறது. இந்த நாட்களை எப்படியோ கடந்து போய்க்கொண்டிருக்கிறேன். அவர் என்னைவிட தைரியசாலி, எந்த இடத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும், சூழ்நிலையை எப்படி கையாள வேண்டும் என்பது பற்றி நன்கு தெரிந்தவர். சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்தபோது கூட அவர் குறத்து மீம்ஸ் போட்டி ரொம்ப ஹர்ட் பண்ணாங்க ஆனா அதையெல்லம் அவர் கடந்து வந்துள்ளார்.
அவர் தனது பெஷனை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார். ஆனால் அவரின் வேகத்திற்கு என்னால் ஈடுகொடுக்க முடியவில்லையா என்பது எனக்கு தெரியவில்லை. மீடியாவில் நாளுககு நாள் எங்களை பற்றி செய்திகளை பார்க்கும்போது காமெடியாகத்தான் எடுத்தக்கொள்கிறேன். வெறும் வாய்க்கு அவல் கிடைத்தது போல பலரும் பலவிதமாக பேசுவார்கள் அதை கண்டுகொள்வதில்லை.
கணவன் மனைவி இடையே சண்டை நடந்தால் ஒரே வீ்ட்டில் இருந்து இருவரும் பேசாமல் இருப்பார்கள் அல்லது கொஞ்சநாள் தனியாக இருப்போம் என்று முடிவெடுப்பார்கள். என்னபொறுத்தவரை எங்களுக்குள் இருக்கும் பிரிவு தற்காலிகமானது தான். மற்றபடி நாங்கள் சட்டப்பூர்வமாக பிரிவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதை நான் இந்த இடத்தில் சொல்ல விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“