China's New Plan: சர்ச்சைக்குரிய அக்சாய் சின் பகுதியில் நெடுஞ்சாலை அமைக்க சீனா திட்டம்

சீனா: அசல் கட்டுப்பாட்டுக் கோட்டு (எல்ஏசி) அருகே சீனா மேற்கொள்ள உள்ள புதிய தந்திரம் முன்னுக்கு வந்துள்ளது. கடந்த வாரம் பெய்ஜிங் வெளியிட்ட நெடுஞ்சாலை கட்டுமானத் திட்டத்தின் படி, சர்ச்சைக்குரிய அக்சாய் சின் பகுதி வழியாக புதிய நெடுஞ்சாலையை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது. அந்த திட்டத்தின் படி, இந்திய எல்லையை ஒட்டி நெடுஞ்சாலை அமைக்கப்படும் எனத் தெளிவாக தெரிகிறது. பாங்காங் ட்சோவில் பாலம் மற்றும் பூட்டானில் ஒரு கிராமத்தை கட்டிய பிறகு, சீனா இப்போது எல்ஏசியில் புதிய சாலையை அமைக்க விரும்புகிறது. இந்த சாலைக்கு ஜி695 நெடுஞ்சாலை என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலை திட்டம் 2035-க்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்ச்சைக்குரிய பகுதியான அக்சாய் சின் பீடபூமி வழியாக இரண்டாவது தேசிய நெடுஞ்சாலையாக இது இருக்கும். அந்த பகுதியில் உள்ள 38,000 சதுர கிலோமீட்டர் நிலத்தை இந்தியா உரிமை  கோரி வருகிறது. அதே நேரத்தில் அக்சாய் சின் பீடபூமியை அதன் ஜின்ஜியாங் மாகாணம் மற்றும் திபெத்தின் ஒரு பகுதியாக சீனா கருதுகிறது. ஏறோனவே 1950 களில், சர்ச்சைக்குரிய பகுதியில் சீனா ஜி219 நெடுஞ்சாலையை அமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில மாதங்களாக, சீனா தனது துருப்புக்கள் மற்றும் உபகரணங்களை எல்ஏசியில் விரைவாக நிலைநிறுத்துவதற்காக எல்லையில் தொடர்ந்து புதிய திட்டங்களை உருவாக்கி வருகிறது. இந்தியாவும் தனது எல்லையில் புதிய சாலைகள், பாலங்கள் கட்டியுள்ளது. எல்ஏசி அருகே கட்டப்படும் இந்தப் புதிய சாலையின் மூலம், இந்தப் பகுதிகளில் சீனா தனது பிடியை வலுப்படுத்த விரும்புகிறது. 

மேலும் படிக்க: இந்திய ராணுவத்துடன் நேரிடையாக மோத அஞ்சி, ஹேக்கர்கர் உதவியை நாடும் சீனா

இந்த புதிய சாலை அக்சாய் சின் வழியாக, இந்தியா, நேபாளம் மற்றும் பூட்டான் நாடுகளின் தெற்கே சென்று, அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லையைத் தாண்டி தென்கிழக்கு திபெத்தின் Lhunze வரை செல்கிறது. சீனாவின் திட்டத்தின் படி, இந்த சீன சாலை நேபாள எல்லைக்கு அருகில் உள்ள கியாரோங் கவுண்டி வழியாகவும் செல்லும். அனால் புதிய கட்டுமானத் திட்டம் குறித்த முழு விவரங்கள் குறித்து தெளிவுபடுத்தப்படவில்லை.

புதிய கட்டுமானத்தின் விவரங்கள் தெளிவாக இல்லை. ஆனால் நெடுஞ்சாலை அமைக்கும் பணி முடிந்தால், டெப்சாங் சமவெளி, கால்வான் பள்ளத்தாக்கு மற்றும் எல்ஏசியில் உள்ள ஹாட் ஸ்பிரிங்ஸ் போன்ற கடுமையான போட்டி நிலவும் பகுதிகளுக்கு அருகில் செல்லக்கூடும் என்று அவர்களின் அறிக்கை கூறுகிறது.

ஜூலை 17 அன்று இரு நாடுகளுக்கும் இடையிலான 16 வது சுற்று பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்த பகுதிகளில் இருந்து விலகுவது தொடர்பாக இதுவரை உறுதியான தீர்வு எதுவும் காணப்படவில்லை. இத்தகைய சூழ்நிலையில், புதிய நெடுஞ்சாலைத் திட்டத்தின் மூலம் எல்.ஏ.சி.யில் சீனாவின் புதிய சாலை திட்டத்தால் இந்தியாவுக்கு பதற்றத்தை உருவாக்கலாம் என சீனா முயற்சித்து வருவதாகத் தெரிகிறது.

மேலும் படிக்க: இந்தியாவின் வெற்றியும், சீனாவின் தோல்வியும்…! பிரதமர் மோடியைப் பாராட்டிய ஜோ பைடன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.