டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான 3-ம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் திரவுபதி முர்மு முன்னிலை வகிக்கிறார். குடியரசுத் தலைவர் தேர்தலில் திரவுபதி முர்மு வாக்கு மதிப்பு 5.77 லட்சம், யஷ்வந்த் சின்ஹா வாக்கு மதிப்பு 2.61 லட்சமாக உள்ளது. மூன்று சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில் மொத்த வாக்குகளில் 50% வாக்குகளை திரவுபதி முர்மு கடந்தார்.