பூரண நலமடைந்தார் டி.ராஜேந்தர் – சென்னை திரும்பியதும் முதல்வருடன் சந்திப்பு!

உயர் சிகிச்சைக்காக கடந்த ஜூன் 14-ம் தேதியன்று அமெரிக்கா சென்றிருந்த டி.ராஜேந்தர், அங்கே சிகிச்சைக்குப்பின் பூரண நலமடைந்தார். அங்கே ஒரு மாதத்திற்கு மேலாக ஓய்வில் இருந்தவர் நாளை சென்னை திரும்புகிறார்.

குறளசரனுடன் டி.ஆர்.

இயக்குநரும் நடிகரும் லட்சிய திராவிட முன்னேற்றக் கழத்தின் தலைவருமான டி.ராஜேந்தர், கடந்த மாதம் திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவரைப் பரிசோதித்ததில் அவருக்கு வயிற்றில் சிறிய ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள்.

இதையடுத்து அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும் அமெரிக்காவுக்கு அவரை அழைத்துச் செல்ல வேண்டியிருந்ததால், சிம்பு, தன் படப்பிடிப்பு வேலைகளையும் தள்ளிவைத்துவிட்டு அமெரிக்காவில் 12 நாள்கள் தங்கியிருந்து அதற்கான ஏற்பாடுகளைக் கவனித்துத் திரும்பினார்.

மனைவியுடன் டி.ஆர்

அமெரிக்காவில் டி.ஆருடன் அவர் மனைவி உஷா, இளைய மகன் குறளரசன், மகள் இலக்கியா, மருமகன் அபிலாஷ், பேரன் ஜேசன் ஆகியோர் தங்கியிருந்து கவனித்து வந்தார்கள். இந்நிலையில் டி.ஆர். பூரண குணமடைந்துள்ளதால், குடும்பத்தினருடன் நாளை (ஜூலை 22) அதிகாலை 2 மணியளவில் சென்னை வந்தடைகிறார். விமான நிலையத்தில் அவரை வரவேற்கவிருக்கிறார் சிம்பு.

டி.ஆர்., பூரண நலம் பெற்றதைத் தொடர்ந்து வட அமெரிக்க தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் டி.ஆரைச் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். நாளை சென்னை திரும்பியதும், தனது சிகிச்சைக்காக உதவி செய்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினைச் சந்தித்து நன்றி கூறுகிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.