ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) கடந்த 11 ஆண்டுகளில் எவ்விதமான வட்டியை அதிகரிக்காத நிலையில் ரஷ்ய – உக்ரைன் போருக்கு பின்பு ஏற்பட்டு உள்ள வர்த்தகம் பாதிப்பு, விலைவாசி உயர்வு மூலம் ஏற்பட்ட பணவீக்கத்தின் உயர்வு காரணமாகத் தற்போது பென்ச்மார்க் வட்டியை உயர்த்தியுள்ளது.
ஐரோப்பிய நாடுகள் தற்போது எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் வட்டி விகிதத்தை உயர்த்த முடிவு செய்து 11 ஆண்டுகளில் முதல் முறையாக வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது.
இந்திய, அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளைத் தொடர்ந்து ஐரோப்பாவும் தனது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை உயர்த்தி முயல்கிறது.
சுடுதண்ணி கூட வாங்க முடியாத மக்கள்.. ஜெர்மனி-க்கு இப்படியொரு நிலைமையா..?!
ஐரோப்பிய மத்திய வங்கி
ஐரோப்பிய மத்திய வங்கி அதன் பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் அதிகரித்து 0.0 சதவீதமாக அறிவித்துள்ளது. குழப்பமாக உள்ளதா, இதுவரை ஐரோப்பிய மத்திய வங்கி மைனஸ்-ல் தனது வட்டி விகிதத்தை வைத்திருந்தது. தற்போது 0.5 சதவீதம் உயர்த்தியதன் மூலம் 0.0 சதவீதமாக உயர்ந்துள்ளது.
பென்ச்மார்க் வட்டி விகிதம்
ஐரோப்பிய மத்திய வங்கி இந்த ஆண்டு மேலும் சில முறை தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. ஜூன் மாதத்தில் ஐரோப்பியப் பகுதியில் உணவு, எரிபொருள் மற்றும் எரிசக்தி செலவுகள் அதிகரித்ததால் நுகர்வோர் விலைகள் 8.6% ஆக உயர்ந்துள்ளது.
பணவீக்க அளவுகள்
இந்தப் பணவீக்க அளவுகள் ஐரோப்பிய மத்திய வங்கி 2% இலக்கை விடவும் பல மடங்கு அதிகம். பாங்க் ஆஃப் இங்கிலாந்து மற்றும் அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் ஆகியவை விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வட்டியை உயர்த்திய பின்பு ஐரோப்பிய மத்திய வங்கி வட்டியை உயர்த்தியுள்ளது கவனிக்க வேண்டிய முக்கியமான ஒன்று.
பலவீனமான வளர்ச்சி
பல ஆண்டுகளாகப் பலவீனமான வளர்ச்சியில் இருந்த காரணத்தால் இப்பிராந்தியத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் முயற்சியில் ஐரோப்பிய மத்திய வங்கி வட்டி விகிதம் 2014 முதல் ஐரோப்பிய பகுதியில் வட்டி விகிதம் எதிர்மறையாக வைத்து உள்ளது.
வட்டி அதிகரிப்பு
கடனுக்கான வட்டியை அதிகரிப்பதன் மூலம் மக்கள் செலவழிப்பதைக் குறைப்பார்கள். இதனால் தேவையும், விலையும் குறையும் என்பது தான் இந்த வட்டி உயர்வின் அடிப்படை யோசனை. இதேவேளையில் அதிக வட்டி ஒரு நாட்டின் பொருளாதாரத்தை மந்த நிலைக்கும் தள்ளக்கூடும்.
ஜெர்மனி-யை துரத்தும் லேமன் பிரதர்ஸ் பிரச்சனை.. திவாலாகி விடுமா..?
European Central Bank raises interest rates for first time in 11 years
European Central Bank raises interest rates for first time in 11 years | European Central Bank: 11 வருடத்திற்குப் பின் முதல் முறையாக வட்டி உயர்வு..!