நாட்டின் 15 ஆவது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 18 ஆம் தேதி நடைபெற்றது. இதில் மொத்தமுள்ள 771 எம்பிக்களில் 763 பேரும், 4,025 எம்எல்ஏக்களில் 3,991 பேரும் வாக்களித்தனர்.
தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. முதல் சுற்றில் எண்ணப்பட்ட எம்பிக்களின் வாக்குகளில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு 540 எம்பிக்களும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட யஷ்வந்த் சின்ஹாவுக்கு 208 எம்பிக்களும் வாக்களித்திருந்தனர்.
இரண்டு மற்றும் முன்றாம் சுற்றுக்களில் எண்ணப்பட்ட எம்எல்ஏக்களின் வாக்குகளையும் முர்மு அமோகமாக பெற்று நாட்டின் 15 ஆவது குடியரசுத் தலைவராக அவர் பொறுப்பேற்க உள்ளார்.
மொத்தம் பதிவான வாக்குகளில் திரவுபதி முர்மு -5,77, 777 ஓட்டுகளையும், யஷவந்த்சினஹா: 2,61,062 வாக்குகளையும் பெற்றனர். இதன் மூலம் கிட்டதட்ட 60% வாக்குகள் வித்தியாசத்தில் முர்மு வெற்றி பெற்றுள்ளார்.
தேசத்தின் குடியரசுத் தலைவராக உள்ள முதல் பழங்குடியின பெண் என்ற பெருமையை பெறும் திரௌபதி முர்மு வரும் 25 ஆம் தேதி பதவியேற்க உள்ளார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ல்டாலின், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.