சீன நிறுவனத்திற்கு ஷாக் கொடுத்த ஜி ஜின்பிங் அரசு.. 1.2 பில்லியன் டாலர் அபராதம்..!

சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான அரசு தனியார் மற்றும் டெக் நிறுவனங்கள் மக்களின் பர்சனல் தரவுகளை அதிகளவில் திருடியும், பயன்படுத்தியும் வர்த்தகச் சந்தையில் ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்தது.

இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகக் கடந்த 3 வருடமாகப் பல முன்னணி நிறுவனத்தின் வர்த்தக முறை, கொள்கைகள் என அனைத்தையும் ஆய்வு செய்து பல மாற்றங்களைக் கொண்டு வந்தது.

இதேவேளையில் சீனாவின் முன்னணி நிறுவனங்கள் முதலீட்டை திரட்டுவதற்காக அமெரிக்காவில் ஐபிஓ வெளியிட்டது, இதைத் திட்டமிட்டுக் கட்டுப்படுத்திய சீன அரசு DIDI என்னும் ஆன்லைன் டாக்ஸி புக்கிங் சேவை நிறுவனத்தைக் கட்டம் கட்டி தற்போது 1.2 பில்லியன் டாலர் அளவிலான அபராதத்தை விதித்துள்ளது ஜி ஜின்பிங் அரசு.

அமெரிக்க, பிரிட்டன் நாடுகளை ஓரம்கட்ட ரஷ்யா புதிய திட்டம்.. இனி நாங்களும் பட்டியலிடுவோம்..!

சீன அரசு

சீன அரசு

சீன அரசு டெக் நிறுவனங்கள் மீது வீசிய முக்கிய டார்கெட் ஆக மாட்டியது DIDI நிறுவனம் தான், இந்த நிறுவனம் அமெரிக்காவில் ஐபிஓ வெளியிட்டு பல மில்லியன் டாலர் முதலீட்டை திரட்டிய சில நாட்களில் தகவல் பாதுகாப்பு சட்ட விதிமீறல் குற்றச்சாட்டை இந்நிறுவனத்தின் மீது சீன அரசு விதித்து.

DIDI நிறுவனம்

DIDI நிறுவனம்

சீன அரசின் மோசமான கட்டுப்பாடுகள் காரணமாகவும், DIDI நிறுவனத்தின் அனைத்து செயலிகளை, சேவைகளையும் தடாலடியாகச் சீன அரசு நிறுத்தியது. இதன் வாயிலாக DIDI அமெரிக்காவில் பங்குச்சந்தையில் இருந்து வெளியேறி ஹாங்காங் பங்குச்சந்தையில் பட்டியலிட முடிவு செய்தது.

1 வருட விசாரணை
 

1 வருட விசாரணை

இதைத் தொடர்ந்து DIDI நிறுவனத்தில், நிர்வாகத்தில், வர்த்தகத்தில் என அனைத்து பிரிவுகளிலும் அரசு அதிகாரிகள் இடம்பெற்று ஆய்வுகளை மேற்கொண்டனர். இதன் மூலம் மொத்த DIDI கட்டமைப்பும் சீன அரசின் கைகளுக்குச் சென்றது. சுமார் 1 வருடத்திற்கும் அதிகமாகக் காலத்திற்கு DIDI நிறுவனத்திடம் சீன அரசு விசாரணை மேற்கொண்டது.

8 பில்லியன் யுவான் அபராதம்

8 பில்லியன் யுவான் அபராதம்

இதைத் தொடர்ந்து ஜூலை 21 ஆம் தேதி DIDI நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் தரவுகளை அதிகளவில் திருடியதாகவும், தகவல் பாதுகாப்புச் சட்டத்தை மீறியதாகவும் அறிவித்து 8 பில்லியன் யுவான் அதாவது 1.2 பில்லியன் டாலர் அளவிலான தொகையை அபராதமாக விதித்துள்ளது சீன அரசு.

சீன டெக் நிறுவனங்கள்

சீன டெக் நிறுவனங்கள்

சீனா அரசு 2021ஆம் ஆண்டில் அந்நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் டெக் நிறுவனங்களைக் குறிவைத்து மோனோபோலியை மொத்தமாக உடைத்தது. இதற்கு இணையாக டெக் நிறுவனங்கள் சந்தையில் பிற போட்டி நிறுவனங்கள் முந்த வேண்டும் என்பதற்காக வாடிக்கையாளர்களின் தரவுகளை அதிகளவில் பயன்படுத்தியது.

அலிபாபா, டென்சென்ட்

அலிபாபா, டென்சென்ட்

சீனாவின் இந்தக் கிடுக்குப் பிடியில் டெக் நிறுவனங்களின் ஆதிக்கத்தை மொத்தமாக ஒடுக்கியதில், அலிபாபா, டென்சென்ட் உட்பட அனைத்து டெக் நிறுவனங்களின் பங்குகளும் மிகவும் மோசமான நிலையை எதிர்கொண்டது. இதனால் சீன முதலீட்டாளர்கள் டெக் பங்குகளில் மட்டுமே பல பில்லியன் டாலர் அளவிலான இழப்பை எதிர்கொண்டனர்.

சீன கடன் வலையில் சிக்கும் பங்களாதேஷ்.. ஜி ஜின்பிங் ராஜ தந்திரம் இதுதானா..?!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

China xi jinping Govt fines DIDI $1.2 billion; After 1 year investigation on violating data security laws

China xi jinping Govt fines DIDI $1.2 billion; After 1 year investigation on violating data security laws சீன நிறுவனத்திற்கு ஷாக் கொடுத்த ஜி ஜின்பிங் அரசு.. 1.2 பில்லியன் டாலர் அபராதம்..!

Story first published: Thursday, July 21, 2022, 20:34 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.