வாயுத்தொல்லையால் அவஸ்தையா? இதிலிருந்து விடுபட இதோ சில எளிய வழிகள்


 இன்றைக்கு பலரும் வாயுத்தொல்லையால் அவஸ்தைப்படுவதுண்டு. இது வந்தாலே வயிற்றுக்கு சிக்கல் தான். ஒரு பக்கம் ஏப்பம் வந்து கொண்டே இருக்கும். இன்னொரு பக்கம் வயிறுக்குள்ளே ஏதோ பாறாங்கல்லைக் கட்டி வைத்தது போல் கனமாக இருக்கும்.

சிலபேருக்கு வயிற்றில் வலி, வயிறு வீக்கம், நெஞ்செரிச்சல் என்று மாறி மாறி ஒன்று வந்துகொண்டே இருக்கும்.

அதிகப்படியான வாயு வயிற்றில் தங்குவதால் தான் இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது.

இதனை தற்காலிகமான மாத்திரைகள் மூலம் சரி செய்யலாம். இருப்பினும் இது தற்காலிகம் தான்.

இதற்கு எளிய முறையில் கூட தீர்வினை காணலாம். தற்போது அவை என்ன என்பதை இங்கே பார்ப்போம். 

வாயுத்தொல்லையால் அவஸ்தையா? இதிலிருந்து விடுபட இதோ சில எளிய வழிகள் | Instant Relieving Tips For Gastric Problem

  • உணவுக்குப்பின் ஒரு டீஸ்பூன் பெருஞ்சீரகம் விதைகளை சாப்பிடுவதன் மூலம் வீக்கத்திலிருந்து நிவாரணம் பெறலாம் அல்லது இஞ்சி மற்றும் எலுமிச்சையுடன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரைப் பருகலாம்
  • உணவுக்கு முன் ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை எடுத்துக் கொள்ளலாம் அல்லது உணவுக்குப் பிறகு மூலிகை தேநீர் எடுத்துக் கொள்ளலாம்.
  • போதுமான அளவு தண்ணீரைக் குடிப்பது, அந்த சோடியத்தில் சிலவற்றை வெளியேற்றவும், அதிகப்படியான திரவங்களை உடல் வெளியிடவும் உதவும், இது குறைந்த வீக்கத்தை உணர வைக்கும். எனவே, நாள் முழுவதும் தண்ணீரைப் பருகவும்.
  • சூடான தேநீரைப் பருகுவது உங்கள் குடலைத் தணிக்கவும், உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடிய வாயுக்களில் இருந்து விடுபடவும் உதவும். நீங்கள் ஏதாவது லேசானதாக விரும்பினால், புதினா டீ பருகலாம்.
     

  • ஓம விதைகள் தைமோல் என்ற சீரண சாறை உருவாக்குகிறது என்கிறார் பெங்களூரைச் சேர்ந்த டாக்டர். அஞ்சு சூட் . வாயுப் பிரச்சனை இருப்பவர்கள் 1/2 டீ ஸ்பூன் ஓம விதைகளைத் தண்ணீரில் போட்டு ஒரு நாளைக்கு என குடித்து வாருங்கள். நல்ல பலன் கிடைக்கும்.
  • 1 டேபிள் ஸ்பூன் சீரகத்தை 2 கப் தண்ணீரில் போட்டு 10-15 நிமிடங்கள் கொதிக்க வையுங்கள். இந்த தண்ணீரை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் வைத்து சாப்பிட்ட பிறகு குடித்து வருங்கள். வாயுத் தொல்லை விரைவில் நீங்கி விடும்.
     

  • 1 டீ ஸ்பூன் பெருங்காயத்தூளைச் சிறிது வெந்நீரில் கலந்து கொள்ளுங்கள். வாயுவை போக்கும் சிறந்த மருந்து பெருங்காயம். இது குடலில் அதிகமான பாக்டீரியாக்கள் உருவாகுவதைத் தடுத்து வாயுவை வெளியேற்றுகிறது. 
  • வாயுத் தொல்லை நீங்க திரிபுலா பவுடர் பயன்படுகிறது. 1/2 டீ ஸ்பூன் திரிபுலா பொடியை நீரில் போட்டு 5-10 நிமிடங்கள் கொதிக்க வையுங்கள். இதைக் குடித்து வந்தால் வாயுத் தொல்லை இருக்காது. இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிறு மந்தமாக இருக்கும். 
  • 1 டீ ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் 2 சிட்டிகை பேக்கிங் சோடாவை சேர்த்து ஒரு தம்ளர் நீரில் கலந்து கொள்ளுங் கள். இதைச் சாப்பிட்ட பிறகு குடிக்கும் போது வாயுத் தொல்லை நீங்கிடும். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.