3 வருடத்தில் முதல் முறையாக நடந்த தரமான சம்பவம்.. ஐடிசி கொடுத்த வாய்ப்பு.. பயன்படுத்திகிட்டீங்களா?

ஐடிசி நிறுவன பங்கின் விலையானது மூன்று வருடத்தில் முதல் முறையாக 300 ரூபாயினை தாண்டியுள்ளது.

இன்று ஐடிசி நிறுவன பங்கின் விலையானது அதன் 52 வார உச்சமாக 302.20 ரூபாயினை தொட்டுள்ளது. இது முன்னதாக 299.50 ரூபாயாக இருந்தது.

இது இந்த நிறுவனத்தின் 111வது வருடாந்திர கூட்டம் நடைபெற்ற நிலையில் இந்தளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது.

இது மட்டும் இல்லாவிட்டால் இந்தியாவும்,இலங்கை பாகிஸ்தான் போல் தான்.. எச்சரிக்கும் நிபுணர்.. ஏன்?

சிறப்பாக செயல்படுகிறது?

சிறப்பாக செயல்படுகிறது?

வருடாந்திர கூட்டத்தில் ஐடிசி நிறுவனத்தின் தலைவர் மற்றும் அதன் நிர்வாக அதிகாரியான சஞ்சீவ் பூரி, சமீபத்திய ஆண்டுகளாக நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது என பங்குதாரர்களுக்கும், நிறுவன வாரிய உறுப்பினர்களுக்கும் தெரிவித்துள்ளார். எஃப் எம் சி ஜி பிரிவில் நிறுவனத்தின் செயல்திறனை பாராட்டிய பூரி, உலகளாவிய அளவில் முன்னேறுவதற்கான திட்டங்களையும் அறிவித்தார்.

ஏற்றுமதி திட்டம்

ஏற்றுமதி திட்டம்

மேலும் உலகளவில் இதனை வெளி சந்தைகளுக்கு எடுத்து செல்லும் திட்டம் உள்ளதாகவும், சமீபத்திய ஆண்டுகளில் ஐடிசி குறிப்பிடத்தகுந்த அளவில் அதன் பிராண்டுகளை ஏற்றுமதி செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வெளி நாடுகளிலும் நாங்கள் விற்பனை ஏற்பாடுகளை செய்துள்ளோம். இதனை மேற்கொண்டு பல்வேறு நாடுகளில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

வருவாய் வளர்ச்சி
 

வருவாய் வளர்ச்சி

கொரோனாவின் தாக்கம் இருந்தபோதிலும் வளர்ச்சி மெதுவாக இருந்தது. எனினும் வருவாய் வளர்ச்சி 25% கண்டுள்ளது. இது கடந்த 2022ம் நிதியாண்டில் 16,000 கோடி ரூபாயினை எட்டியுள்ளது. அதிலும் இந்த காலகட்டத்தில் பணவீக்க தலைவலி இருந்ததாகவும், எனினும் வளர்ச்சி கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் அதன் எபிடா விகிதத்தினையும் தக்க வைத்துக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 6.5% அதிகரித்துள்ளது.

சவால்களுக்கு மத்தியில் வளர்ச்சி

சவால்களுக்கு மத்தியில் வளர்ச்சி

சமீபத்திய ஆண்டுகளில் நிறுனத்தின் வளர்ச்சி குறித்து கூறிய பூரி, சவால்கள், பணவீக்கம் என பல சவால்கள் இருந்தபோதிலும் நிறுவனத்தின் மொத்த வருவாய் விகிதம் 22.7% அதிகரித்து, 59,000 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதேசமயம் எபிடா விகிதம் 19000 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. பல சவால்கள் இருந்தது வரும் நிலையிலும், நிறுவனம் அனைத்து துறைகளிலும் வலுவான வளர்ச்சியினை பதிவு செய்துள்ளது.

பங்கினை வாங்கலாமா?

பங்கினை வாங்கலாமா?

இந்த வலுவான வளர்ச்சி மத்தியில் இந்த பங்கினை வைத்திருப்பவர்கள் 340 என்ற இலக்கிற்காக காத்திருக்கலாம். எனினும் 265 ரூபாய் என்ற டிரெய்லிங் ஸ்டாப் லாஸ்-ஐயும் வைக்க வேண்டும். தற்போது இந்த பங்குகளை வாங்கி வைக்கலாம். இது 275 ரூபாய் என்ற லெவலில் கிடைத்தால் வாங்கி வைக்கலாம். எனினும் கட்டாயம் 265 ரூபாயினை ஸ்டாப் லாஸ் ஆக வைத்துக் கொள்ள வேண்டும் என தரகு நிறுவனம் கணித்துள்ளது.

Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

ITC share price crosses Rs300 for 1st time in three years: is it a right to buy?

ITC share price crosses Rs300 for 1st time in three years: is it a right to buy?/3 வருடத்தில் முதல் முறையாக நடந்த தரமான சம்பவம்.. ஐடிசி கொடுத்த வாய்ப்பு.. பயன்படுத்திகிட்டீங்களா?

Story first published: Thursday, July 21, 2022, 20:22 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.