சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்… ஒற்றை ஆளாக போராடும் பாக்கியலட்சுமி

இல்லத்தரசிகள் மட்டுமல்லாது இளைஞர்கள் மத்திலும் நல்ல வரவேற்பை பெற்று வருவது சின்னத்திரை நிகழ்ச்சிகள். வார நாட்களில் சீரியலும். வார இறுதியில் ரியாலிட்டி ஷோக்களும் ரசிகர்களின் மனதை ஆக்கிரமித்து வருகினறன.

இதை பயன்படுத்திக்கொள்ளும் வகையில்.சேனல்களும் அவ்வப்போது புதிய சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை களமிறங்கி வருகின்றன. இதில் பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தாலும். டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலை பெறுவது ஒரு சில சீரியல்கள் மட்டுமே.

இதிலும் குறிப்பாக சன்டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்களுக்கே அதிக போட்டி நடக்கும். ஆனால் கடந்த சில மாதங்களாக விஜய் டிவி சீரியல்களை வீழ்த்தி டிஆர்பியில் சன்டிவி சீரியல்கள் நல்ல ரேட்டிங்கை பெற்று வந்தது. அதற்கு ஏற்றார்போல் விஜய் டிவி சீரியல்கள் ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் வகையில் அமைந்துது

ஆனால் தற்போது விஜய் டிவியின் பாக்யலட்சுமி சீரியல் சன்டிவி சீரியல்களுக்கு சவால் விடும் வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் உள்ளது. தற்போது வெளியாகியுள்ள டிஆர்பி ரேட்டிங்கில். சன். டிவியின் கயல் சீரியல் வழக்கம்போல் முதலிடத்திர் உள்ளது.. விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் 2-வது இடத்தை பெற்றுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு பிறகு விஜய் டிவி சீரியல் டாப் ரேட்டிங்கில் வருவது இதுவே முதல்முறையாககும். தொடர்ந்து 3வது இடத்தில் வானத்தை போல. 4-வது இடத்தில் ரோஜா 5-வது இடத்தில் கண்ணான கண்ணே ஆகிய சீரியல்கள் உள்ளன.

கடந்த சில மாதங்களாக தோய்வை நோக்கி சென்றுகொண்டிருந்த பாக்கியலட்சுமி சீரியல், தற்போது பாக்யாவுக்கு கோபி குறித்து உண்மை தெரிந்துவிட்டதால்., விறுவிறுப்பாக சென்றுகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.