நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமண வீடியோ நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாக உள்ளதாக, அந்நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் இருவரின் சில புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்துள்ளது.
தென்னிந்திய திரையுலகில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை நயன்தாரா. ‘நானும் ரௌடிதான்’ படத்தில் இணைந்து பணியாற்றியதன் மூலம் நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவருக்கும் பழக்கம் உருவானது. நாளடைவில் இந்தப் பழக்கம் காதலாக மாறிய நிலையில், சுமார் 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதையடுத்து இவர்களின் திருமணம் எப்போது நடக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ஷெரட்டன் க்ராண்ட் ரிசார்ட்டில் பிரம்மாண்டமாக, ஆடம்பரமாக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இவர்களின் திருமண நிகழ்வை பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் வெளியிட 25 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்து இருப்பதாக தகவல் வெளியானநிலையில், நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு வந்த பிரபலங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக புகைப்படம் எடுக்கக் கூடாது என்றும், அதனால் பிரபலங்களின் செல்ஃபோனுக்கு அனுமதி மறுக்கப்பட்டதும் தெரிந்ததே. எனினும் இவர்களது திருமண விழாவில் ரஜினிகாந்த், ஷாரூக்கான், கார்த்தி, சூர்யா, ஜோதிகா, விக்ரம் பிரபு, சரண்யா பொன்வண்ணன், மணிரத்னம், அட்லீ, ஏ.ஆர். ரஹ்மான், அனிருத், விஜய் சேதுபதி, அஜித்தின் குடும்பத்தினர் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
அதன்பிறகு, இவர்கள் திருப்பதி சென்ற நிலையில், அங்கு செருப்பு காலுடன் சென்றதால் சர்ச்சையானது. பின்னர் திருமணத்தையொட்டி பாதுகாப்பு கருதி மாமல்லபுரம் கடற்கரையில் பொதுமக்களை அனுமதிக்காததும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கிடையில், ஒருமாதம் கழித்து ரஜினிகாந்த், ஏ.ஆர். ரஹ்மான், அனிருத், மணிரத்னம், விஜய் சேதுபதி ஆகியோர் கலந்துகொண்ட புகைப்படங்களை மட்டும் விக்னேஷ் சிவன் தனது சமூகவலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டார். இதனால் நெட்ஃபிளிக்ஸ் கோபத்தில் இருந்ததாகவும், ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, திருமணத்திற்காக செலவு செய்த தொகை, ஒளிபரப்பு உரிமை தொகை உள்ளிட்ட மொத்த பணத்தையும் திருப்பி தர நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு நோட்டீஸ் அனுப்பியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளம் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், திருமணத்திற்கு முந்தைய தினத்தின்போது கடற்கரையில் நடத்திய ஃபோட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. மேலும் விரைவில் திருமண வீடியோவை வெளியிட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
These images of Nayanthara and Vignesh have us seeing stars
BRB, we’re doing a little happy dance ourselves because THEY’RE coming to Netflix it’s beyond a fairy tale!! pic.twitter.com/14poQwNAZv
— Netflix India (@NetflixIndia) July 21, 2022