இலங்கை வழியில் பாகிஸ்தான், மாலத்தீவு, பங்களாதேஷ்.. எப்படி தெரியுமா?

இலங்கையில் நிலவி வரும் பிரச்சனைக்கு மத்தியில் லட்சக்கணக்கான மக்கள் பெரும் பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளனர். ஒரு வேலை சோற்றுக்கே கூட கஷ்டப்படும் நிலையில் உள்ளனர்.

இப்படி பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் பொருளாதார பிரச்சனை தற்போது மிகப்பெரிய அரசியல் பிரச்சனையாகவும் உருவெடுத்துள்ளது. அங்கு எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்பதும் பெரும் கவலையளிக்கும் ஒரு விஷயமாகவே உள்ளது.

இதற்கிடையில் இலங்கை போல இன்னும் சில நாடுகள் சரியான சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், அவையும் பிரச்சனையை எதிர்கொள்ளலாம் என சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கூறியுள்ளார். குறிப்பாக பாகிஸ்தான், மாலத்தீவு, பங்களாதேஷ் போன்ற நாடுகளையும் பட்டியலிட்டுள்ளார்.

தூத்துக்குடி-க்கு ஜாக்பாட்.. ரூ.7,164 கோடி திட்டம் விரைவில்.. சுவிஸ், UAE என 6 நிறுவனங்கள் போட்டி..!

பாகிஸ்தான் பிரச்சனை

பாகிஸ்தான் பிரச்சனை

இலங்கையை போலவே தற்போது பாகிஸ்தானிலும் பற்பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றன. குறிப்பாக சீனாவின் கடன் வலையில் சிக்கிய நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. பாகிஸ்தான் சமீபத்தில் அதன் எரிபொருள் மீதான மானியத்தையும் குறைத்தது. இதன் காரணமாக எரிபொருள் விலையானது மிக மோசமான உச்சத்தினை எட்ட ஆரம்பித்துள்ளது.

பாகிஸ்தான் கடன் பிரச்சனை

பாகிஸ்தான் கடன் பிரச்சனை

பாகிஸ்தானின் அன்னிய செலவாணியும் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், அதன் கடன் பிரச்சனையும் உச்சத்தில் உள்ளது. பாகிஸ்தான் அதன் வருவாய் விகிதத்தில் சுமார் 40% அதன் கடனுக்கான வட்டியாக செலுத்துதாக தரவுகள் கூறுகின்றன. இதற்கிடையில் பாகிஸ்தானின் கரன்சி மதிப்பும் தொடர்ந்து வரலாறு காணாத சரிவினை கண்டு வருகின்றது.

மாலத் தீவு - வருவாய் இழப்பு
 

மாலத் தீவு – வருவாய் இழப்பு

இலங்கையை போலவே மாலத்தீவும் சுற்றுலா வருமானத்தினையே முக்கிய வருவாய் ஆதாரமாக கொண்டுள்ள ஒரு நாடு. ஆனால் கொரோனா காரணமாக சுற்றுலா துறையானது முழுவதும் முடங்கியது. இதற்கிடையில் மாலத்தீவின் வளர்ச்சியானது மோசமான சரிவினை எட்டியது. கடந்த 2020ல் 33% மேலாக சரிவினைக் கண்டது. இந்த காலகட்டத்தில் வேலையின்மை விகிதமும் மோசமான அளவு அதிகரித்தது.

மாலத் தீவு - கடன்

மாலத் தீவு – கடன்

மாலத்தீவின் பொதுக்கடன் என்பது சமீப வருடங்களில் கணிசமாக அதிகரித்துள்ளதையும் பார்க்க முடிகிறது. அது இப்போது அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 100% மேலாக வளர்ச்சி கண்டுள்ளது. மொத்தத்தில் வருவாயின் பெரும்பகுதி வட்டியாகவும் செலுத்தப்படுகிறது. அதன் கடன் விகிதம் அதன் ஜிடிபி-யில் 78% மேலாக உள்ளது.

பங்களாதேஷ்

பங்களாதேஷ்

இதே பங்களாதேஷிலும் பணவீக்கம் எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 7.42% ஆக உச்சத்தினை எட்டியுள்ளது. அதோடு கையிருப்பும் குறைந்து வருவதாக அத்தியாவசியமற்ற இறக்குமதிகளை கட்டுப்படுத்தவும், வெளி முதலீடுகளை அதிகரிக்கவும், அரசு வேகமாக செயல்படுத்தவும் ஐஎம்எஃப் பரிந்துரை செய்துள்ளது.

பங்களாதேஷ் கடன்

பங்களாதேஷ் கடன்

பங்களாதேஷ் கடன் விகிதமும் கடந்த 2002ம் ஆண்டு தொடங்கி தொடர்ச்சியாக 2020 வரையில் ஏற்றம் கண்டுள்ளது. இது மேற்கொண்டு அதிகரித்திருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது அதன் ஜிடிபியில் சுமார் 22% இருக்கலாம் எனவும் தர்வுகள் மூலம் அறிய முடிகிறது.

சீர்திருத்தம் வேண்டும்

சீர்திருத்தம் வேண்டும்

மொத்தத்தில் மேற்கண்ட நாடுகளின் அரசுகள் விரைவில் சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வளர்ச்சியினை மீட்க வேண்டும். குறிப்பாக அன்னிய செலவாணியை அதிகரிக்க வேண்டும். அத்தியாவசிய உனவு பொருட்கள், மருந்து பொருட்கள், எரிபொருள் இற்ககுமதி, கடன் பிரச்சனை என முக்கிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும், வளர்ச்சியினை ஊக்குவிக்க பணப்புழக்கத்தினை ஊக்குவிக்க வேண்டும் என பல காரணிகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Countries like Sri Lanka, Pakistan, Maldives and Bangladesh are also facing many challenges

Countries like Sri Lanka, Pakistan, Maldives and Bangladesh are also facing many challenges/இலங்கை வழியில் பாகிஸ்தான், மாலத்தீவு, பங்களாதேஷ்.. எப்படி தெரியுமா?

Story first published: Thursday, July 21, 2022, 17:03 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.