இந்திய குடியரசு தலைவரின் சம்பளம் என்ன? இவ்வளவு வசதிகளா?

இந்தியாவின் 15 ஆவது குடியரசுத் தலைவர் தேர்தல் கடந்த திங்களன்று நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இந்த தேர்தலில் பாஜக கூட்டணி கட்சியின் சார்பில் திரெளபதி முர்மு மற்றும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்த தேர்தலில் வெற்றி பெற்று 15 ஆவது குடியரசுத் தலைவராகப் போவது யார் என்பது இன்னும் ஒரு சில மணி நேரத்தில் தெரிந்து விடும்.

மதுரை, திருநெல்வேலி-க்கு ஜாக்பாட்.. அடுத்தடுத்து வரும் 3 ஐடி நிறுவனங்கள்..!

இந்த நிலையில் குடியரசுத் தலைவருக்கான அதிகாரங்கள் என்ன? அவருக்கான வசதிகள், குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள வசதிகள், குடியரசுத் தலைவராக இருக்கும் போதும் ஓய்வு பெற்ற பின்னரும் அவருக்கு கிடைக்கும் சலுகைகள் என்ன? என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

குடியரசு தலைவர்

குடியரசு தலைவர்

இந்திய அரசின் தலைவராகவும், நாட்டின் அனைத்து ஆயுதப்படைகளின் தலைவராகவும் நாட்டின் முதல் குடிமகன் மற்றும் அவர்கள் நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமையின் அடையாளமாக குடியரசு தலைவர் உள்ளார்.

வாக்கு எண்ணிக்கை

வாக்கு எண்ணிக்கை

இந்தியாவின் 14வது குடியரசுத் தலைவரான ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கிடையில், இந்தியாவின் அடுத்த 15வது குடியரசு தலைவருக்கான வாக்குப்பதிவு ஜூலை 18ஆம் தேதி நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 99 சதவீத வாக்குகள் பதிவாகிய நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

திரெளபதி முர்மு
 

திரெளபதி முர்மு

இந்தத் தேர்தலில் திரௌபதி முர்மு வெற்றி பெற்றால், குடியரசு தலைவராகும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த முதல் பெண்மணி என்ற பெருமையை பெறுவார். குடியரசு தலைவர் பதவி என்பது பல அதிகாரங்கள் மற்றும் சலுகைகளுடன் கூடியது. இந்திய குடியரசு தலைவரின் சம்பளம் மற்றும் அவர்களின் பதவிக்காலத்தில் அவர்கள் அனுபவிக்கும் பிற சலுகைகளைப் பார்ப்போம்.

1. இந்திய ஜனாதிபதியின் இல்லம்

1. இந்திய ஜனாதிபதியின் இல்லம்

உலகின் மிகப்பெரிய ஜனாதிபதி மாளிகைகளில் ஒன்றான ராஷ்டிரபதி பவன் என்ற இந்திய ஜனாதிபதியின் இல்லமாகும். ராஷ்டிரபதி பவன் என்பது உலகின் தலைசிறந்த கட்டிடக் கலைஞர்களான சர் எட்வின் லுட்யென்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் ஆகியோரின் உருவாக்கம் ஆகும். 200,000 சதுர அடி பரப்பளவில் 330 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்த இந்த கட்டிடத்தில் 340 அறைகள் உள்ளன.

2. வாழ்க்கை முறை

2. வாழ்க்கை முறை

பிரமாண்டமான மாளிகை மற்றும் குதிரைகளின் அணிவகுப்பு, ஒரு பெரிய கோல்ஃப் மைதானம், புகழ்பெற்ற முகலாய தோட்டங்கள் மற்றும் பிரமிக்க வைக்கும் வகையில் அலங்கரிக்கப்பட்ட தோட்டங்கள் குடியரசு தலைவர் மாளிகையில் உள்ளது. 15 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் சின்னமான முகலாய தோட்டங்கள், குடியரசுத் தலைவர் மாளிகையின் ஆன்மாவாக சித்தரிக்கப்படுகின்றன.

3. இந்திய ஜனாதிபதியின் சம்பளம்

3. இந்திய ஜனாதிபதியின் சம்பளம்

இந்தியக் குடியரசுத் தலைவர் மாதத்திற்கு சுமார் 5 லட்சம் ரூபாய் சம்பளம் பெறுகிறார். 7வது ஊதியக் குழு அமலுக்கு பிறகு குடியரசுத் தலைவரின் சம்பளம் 200 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. 2017-ம் ஆண்டு வரை குடியரசுத் தலைவருக்கு மாதம் ரூ.1.50 லட்சம் என இருந்தது. ஆனால், 2017ஆம் ஆண்டில் மாதம் ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டது.

4. சேவைக்கான ஊழியர்கள்

4. சேவைக்கான ஊழியர்கள்

இந்திய குடியரசு தலைவர், ராஷ்டிரபதி பவனையும் கவனித்து கொள்ள, ஜனாதிபதிக்கு நூற்றுக்கணக்கான பணியாளர்கள் வழங்கப்படுகின்றனர்.

5. ஆடம்பரமான விடுமுறை ஓய்வு

5. ஆடம்பரமான விடுமுறை ஓய்வு

இரண்டு ஆடம்பரமான விடுமுறை ஓய்வு மாளிகைகள் குடியரசு தலைவருக்கு உண்டு. ஒன்று ஹைதராபாத்தில் உள்ள ராஷ்டிரபதி நிலையம் மற்றொன்று சிம்லாவில் உள்ள ரிட்ரீட் கட்டிடம். நமது நாட்டின் ஒற்றுமை மற்றும் பலதரப்பட்ட கலாச்சாரங்கள் மற்றும் மக்களின் ஒற்றுமையின் அடையாளமாக இந்த மாளிகைகள் அமைந்துள்ளன

6. குடியரசு தலைவரின் கார்கள்

6. குடியரசு தலைவரின் கார்கள்

குடியரசு தலைவர் தனது உத்தியோகபூர்வ வருகைகளுக்காக பிரமிக்க வைக்கும் கருப்பு Mercedes Benz S600 (W221) புல்மேன் கார்ட் மற்றும் அதிக பாதுகாப்புடன் கூடிய லிமோசைன் கார் ஆகியவை உள்ளன.

7. பிற சலுகைகள்

7. பிற சலுகைகள்

குடியரசு தலைவருக்கு வாழ்நாள் முழுவதும் இலவச மருத்துவம், வீடு மற்றும் சிகிச்சை வசதிகள் உள்ளிட்ட வசதிகள் கிடைக்கும்.

8. பாதுகாப்பு

8. பாதுகாப்பு

குடியரசு தலைவரின் மெய்க்காப்பாளர் (பிபிஜி) இந்திய குடியரசு தலைவருக்கான பாதுகாப்பை வழங்குவார். பிபிஜி என்பது இந்திய ராணுவத்தில் மிகவும் மூத்த ஒரு பதவி மட்டுமல்ல, பழமையான பிரிவும் ஆகும். பிபிஜி அமைப்பில் பயிற்சி பெற்ற வீரர்கள் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

9. ஓய்வு பெற்ற பிறகு

9. ஓய்வு பெற்ற பிறகு

ஓய்வுக்கு பிறகும் இந்தியக் குடியரசுத் தலைவர் எண்ணற்ற நன்மைகளைப் பெற தகுதியுடையவர். குடியரசு தலைவருக்கு ஓய்வூதியம் ரூ. மாதம் 1.5 லட்சம். ஒரு முழு வசதியுடன் கூடிய வாடகை இல்லாத பங்களா மற்றும் ஒரு துணையுடன் இலவச ரயில் அல்லது விமானப் பயணம்.

10. குடும்ப ஓய்வூதியம்

10. குடும்ப ஓய்வூதியம்

ஓய்வுபெறும் குடியரசு தலைவருக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தில் பாதிக்கு சமமான குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். குடியரசு தலைவர் பதவியில் இருக்கும்போதோ அல்லது ஓய்வு பெற்ற பின்னரோ மரணம் அடைந்தால் உயிருடன் இருக்கும் அவருடைய மனைவிக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். மேலும் மனைவிக்கு இலவச மருத்துவ கவனிப்பு மற்றும் சிகிச்சை, பராமரிப்பு, தொலைபேசி மற்றும் அரசாங்க வாகனம் ஆகியவையும், ஒரு அலங்கார வீடும் வழங்கப்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

What is the Salary and Perks of the President of India

What is the Salary and Perks of the President of India| இந்திய குடியரசு தலைவரின் சம்பளம் என்ன? இவ்வளவு வசதிகளா?

Story first published: Thursday, July 21, 2022, 15:29 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.