விமான பயணிகளுக்கு இனி பணம் மிச்சம்… சிவில் போக்குவரத்து துறையின் முக்கிய உத்தரவு!

விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் தங்களுடைய லக்கேஜ்களுக்காக போர்டிங் பாஸ் பெறுவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த போர்டிங் பாஸில் பயணியின் பெயர், செல்போன் எண், இமெயில் முகவரி, சீட் நம்பர், பிளேட் நம்பர், உள்பட சில விபரங்கள் இருக்கும். இந்த போர்டிங் பாஸ் ஒவ்வொரு விமான பயணிக்கு முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விமான பயணிகளுக்கு செக்-இன் கவுண்டரில் போர்டிங் பாஸ் வழங்கும் போது ஒருசில விமான நிறுவனங்கள் கட்டணங்களை பெற்று வரும் நிலையில் இனி கட்டணங்கள் விதிக்கக்கூடாது என சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போது இந்தியாவில் உள்ள முன்னணி விமான நிறுவனங்கள் போர்டிங் பாஸ் வகைக்காக கட்டணம் வசூலித்து வரும் நிலையில் இனி வசூலிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

3 வருடத்தில் முதல் முறையாக நடந்த தரமான சம்பவம்.. ஐடிசி கொடுத்த வாய்ப்பு.. பயன்படுத்திகிட்டீங்களா?

போர்டிங் பாஸ்

போர்டிங் பாஸ்

பயணிகளிடமிருந்து போர்டிங் பாஸ்களை வழங்குவதற்கு விமான நிறுவனங்கள் கூடுதல் தொகையை வசூலிக்கின்றன என்பது MoCA (சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம்) கவனத்திற்கு வந்துள்ளது என்று சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் கூறியுள்ளது. இந்த கூடுதல் தொகை பெறுவதற்கு விமான நிறுவனங்களின் விதிகளில் இடமில்லை என தெரிவித்துள்ளது. எனவே விமான நிலையங்களில் உள்ள செக்-இன் கவுண்டர்களில் போர்டிங் பாஸ் வழங்குவதற்கு விமான நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விமான நிறுவனங்கள்

விமான நிறுவனங்கள்

இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் மற்றும் கோ ஃபர்ஸ்ட் போன்ற விமான நிறுவனங்கள், செக்-இன் கவுண்டரில் ஒரு பயணியிடம் போர்டிங் பாஸ் வகைக்காக தற்போது ரூ.200 கட்டணம் வசூலித்து வருவதாக கூறப்படுகிறது. இனிமேல் இந்த நிறுவனங்கள் இந்த கட்டணத்தை பெறக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிவில் விமான போக்குவரத்து துறை
 

சிவில் விமான போக்குவரத்து துறை

மே 21, 2020 அன்று, பயணிகள் இணைய செக்-இன் செய்து போர்டிங் பாஸைப் பெறுவதை சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் கட்டாயமாக்கியது. இருப்பினும், மே 9, 2022 அன்று, அமைச்சகம் ஒரு உத்தரவை வெளியிட்டது. அதில் விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு சரியான நேரத்தில் வெப் செக்-இன், பேக் டேக் அச்சிடுதல் போன்றவற்றை செய்து முடித்துவிட வேண்டும் என அறிவுறுத்தியது.

ஏர் இந்தியா

ஏர் இந்தியா

ஏர் இந்தியா ஏற்கனவே தாங்கள் போர்டிங் பாஸ் வகைக்காக கட்டணம் வசூல் செய்யவில்லை என தெரிவித்துள்ளது. மேலும் ஏர் இந்தியா எப்போதும் ஒழுங்குமுறை அமைப்புகளால் வடிவமைக்கப்பட்ட அனைத்து விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை கடைபிடிக்கிறது என்றும் தெரிவித்துள்ளது.

இண்டிகோ

இண்டிகோ

போர்டிங் பாஸ் வகைக்காக கட்டணங்கள் வசூலித்து வரும் இண்டிகோ உள்பட ஒருசில விமான நிறுவனங்கள் இதுகுறித்து கூறியபோது, போர்டிங் பாஸ்கள் மீதான MoCA ஆர்டரை இனி விதிமுறைகளின்படி நாங்கள் பின்பற்றுவோம்’ என தெரிவித்துள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Airlines can’t charge extra fee for issuing boarding, government directs airlines

Airlines can’t charge extra fee for issuing boarding, government directs airlines | விமான பயணிகளுக்கு இனி பணம் மிச்சம்… சிவில் போக்குவரத்து துறையின் முக்கிய உத்தரவு!

Story first published: Friday, July 22, 2022, 10:10 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.