கோயம்பேடு 100 அடி சாலையில் போக்குவரத்து மாற்றம்: வட பழனியில் இருந்து செல்வது எப்படி?

Traffic diversion: Greater Chennai Traffic Police Tamil News: சென்னை கோயம்பேடு முதல் வடபழனி வரையிலான 100 அடி சாலையில் நாளை சனிக்கிழமை (ஜூலை 23) முதல் 10 நாட்களுக்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்தில் மாற்றம் செய்ய பெருநகர சென்னை போக்குவரத்து காவல்துறை பரிந்துரை செய்துள்ளது.

அதன்படி, கோயம்பேடு முதல் வடபழனி வரை உள்ள விநாயகபுரம் சந்திப்பு, பெரியார் பாதை சந்திப்பு மற்றும் நெற்குன்றம் பாதை சந்திப்பு ஆகிய 3 இடங்களில் உள்ள மைய தடுப்புசுவர் மூடப்படுகிறது. இதற்கு மாற்றாக, ஏற்கனவே உள்ள செப் கேம் வில்லேஜ் சந்திப்பு, வடபழனி பாலத்தின் கீழ் ஆகிய 2 ‘யு டர்னில்’ போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.

இதேபோல், விநாயகபுரம் சந்திப்புக்கும், பெரியார் பாதை சந்திப்புக்கும் இடையே அரும்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையம் அருகில் உள்ள தூண் எண்கள் 110 மற்றும் 111 இடையே ‘யு டர்ன்’ உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், பெரியார் பாதைக்கும், நெற்குன்றம் பாதைக்கும் இடையில் தூண் எண்கள் 126 மற்றும் 127 இடையில் ‘யு டர்ன்’ உருவாக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த இடங்களில் ‘யு டர்ன்கள்’?

வடபழனியில் இருந்து கோயம்பேடு செல்லும் வாகனங்கள் நெற்குன்றம் சந்திப்பில் வலதுபுறம் திரும்ப விரும்புபவர்கள் நேராக சென்று 170 மீட்டர் தூரத்தில் தூண் எண் 126 மற்றும் 127 இடையில் புதியதாக அமைந்துள்ள ‘யு டர்னில்’ திருப்பி செல்லலாம்.

வடபழனியில் இருந்து கோயம்பேடு செல்லும் வழியில் பெரியார்பாதை சந்திப்பில் வலதுபக்கம் செல்லும் வாகனங்கள் கோயம்பேடு திசையில் 238 மீட்டரில் அரும்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையம் அருகில் தூண் எண்கள் 110 மற்றும் 111 இடையில் புதிதாக அமைந்துள்ள ‘யு டர்னில்’ திரும்பிக்கொள்ளலாம்.

விநாயகபுரம் சந்திப்பில் எம்.எம்.டி.ஏ. காலனி வலதுபுறம் திரும்பிச்செல்ல விரும்பும் வாகனங்கள் 496 மீட்டர் தொலைவில் உள்ள செப் கேம் வில்லேஜ் சந்திப்பு ‘யு டர்னில்’ திரும்பிச் செல்லலாம்.

கோயம்பேடு நோக்கி…

கோயம்பேடு திசையில் இருந்து வடபழனி நோக்கி வரும் வாகனங்கள் விநாயகபுரம் சந்திப்பை தாண்டி 243 மீட்டர் தொலைவில் உள்ள அரும்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையம் அருகில் உள்ள தூண் எண்கள் 110 மற்றும் 111 இடையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள ‘யு டர்னில்’ திரும்பி விநாயகபுரம் நோக்கிச் செல்லலாம்.

கோயம்பேட்டில் இருந்து வரும் வாகனங்கள் நெற்குன்றம் சந்திப்பில் வலதுபுறம் திரும்பும் வாகனங்கள் நேராக வடபழனி சர்வீஸ் ரோடு பாலத்தின் கீழ் 199 மீட்டர் தூரம் சென்று ‘யு டர்ன்’ எடுத்து செல்லலாம். நெற்குன்றம் பாதையில் இருந்து வரும் வாகனங்கள் இடதுபுறம் திரும்பி வடபழனி பாலத்தின் கீழ் உள்ள ‘யு டர்னில்’ திரும்பி செல்லலாம்.

ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது:

இந்த போக்குவரத்து மாற்றங்கள் தொடர்பாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் 044-23452362, 42042300 ஆகிய தொலைபேசி எண்களிலும், Greater Chennai Traffic Police@ChennaiTraffic (டுவிட்டர்), Greater Chennai Traffic Police (இன்ஸ்டாகிராம்), Chennai Traffic@Traffic Chennai (பேஸ்-புக்) ஆகிய சமூக வலைத்தளங்கள் வழியாகவும் ஆலோசனைகளை வழங்கலாம் என்று பெருநகர சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.