காவல்துறை எச்சரிக்கை எதிரொலி: கள்ளக்குறிச்சி பள்ளியில் களவாடிச் சென்ற பொருட்களை திருப்பி ஒப்படைத்த மக்கள்!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பள்ளி  மாணவி மரணத்தை தொடர்ந்து, ஏற்பட்ட கலவரத்தின்போது, களவாடிச் சென்ற பொருட்களை திருப்பி ஒப்படையுங்கள் என காவல்துறையினர் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுத்த நிலையில், வன்முறையாளர்கள், அருகே உள்ள கிராமத்தினர் தாங்கள் எடுத்துச்சென்ற பொருட்களை சாரையோரம் கொண்டு வந்து வைத்தனர்.  அவை மலைபோல் குவிக்கப்பட்டுள்ளன.

கள்ளக்குறிச்சி சக்தி  பள்ளியில் படித்து வந்த 12ம் வகுப்பு மாணவியின் மரணத்தைத் தொடர்ந்து  கடந்த 17ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை)  நடந்த கலவரத்தின் போது பள்ளியிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை, காவல்துறை மற்றும் வருவாய்த் துறையின் எச்சரிக்கைக்குப் பிறகு, கிராம மக்கள் சாலையோரத்தில் வைத்தனர்.

கள்கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் +2ம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த 12ம் தேதி இரவு மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர், உறவினர்கள் குற்றச்சாட்டு கூறி வந்த நிலையில் மாணவியின் மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு கடந்த 17ம் தேதி பள்ளி முன்பு நடைப்பெற்ற போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது. இதில் 2000க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் போலீசார் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தி தனியார் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து அங்கிருந்த வாகனங்கள், பொருட்களை எல்லாம் அடித்து நொறுக்கி சூறையாடியதோடு, தீ வைத்தும் கொளுத்தப்பட்டது.

இந்த கலவரத்தை பயன்படுத்தி கொண்டு பள்ளிக்கு அருகில் இருந்த பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பள்ளிக்குள் இருந்த மேஜை, நாற்காலிகள், வகுப்பறைகளில் இருந்த டேபிள், பென்ச், சமையல் பாத்திரங்கள், ஏசி இயந்திரங்கள், கணினிகள் என கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் தூக்கி சென்றனர்.  இதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களல் வைரலானது.

இதையடுத்து,  தனியார் பள்ளியில் இருந்த எடுத்து செல்லப்பட்ட பொருட்களை எல்லாம் பள்ளி வளாகம் அருகே எடுத்து வந்து போட்டு விட்டு செல்லுமாறு சின்னசேலம் வருவாய் துறை அதிகாரிகளின் ஏற்பாட்டின் படி பள்ளியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது இல்லையென்றால் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என குரல் எழுப்பியபடி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், காவல்துறையின் அறிவிப்புக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. காவல்துறை தண்டோராவிற்கு அஞ்சி, பள்ளியில் இருந்து எடுத்துச்சென்ற பொருட்களை சாலையோரத்தில் வைத்து சென்றுள்ளனர். இந்த பொருட்கள் குவியலாக காணப்படுகிறது.

கள்ளக்குறிச்சி வன்முறைக்கு வாட்ஸப் குழுவும் வெளியூர் நபர்களும் தான் காரணம்… சுற்றுவட்டார கிராம மக்கள்…

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.