உலகின் வயதான ஆண் பாண்டா உயிரிழப்பு: சோகத்தில் ஆழ்ந்த ஹாங்காங் பூங்கா

உலகின் மிக வயதான ஆண் பாண்டா கரடி உடல் நலக்குறைவுக் காரணமாக உயிரிழந்தது.

ஆன்-ஆன் (An-An) என்ற பெயரைக் கொண்ட அந்த ஆண் பாண்டா கரடி,ஹாங்காங்கில் உள்ள ஓஷன் பார்க்கில் வளர்ந்தது. 1985 ஆம் ஆண்டு பிறந்த ஆன்-ஆன் பாண்டா 1999 ஆம் ஆண்டு முதல் இந்த பூங்காவில் வளர்ந்து வருகிறது.

மனிதர்களின் பராமரிப்பில் உலகிலேயே மிக நீண்ட காலம் உயிர் வாழ்ந்த ஆண் பாண்டா என்ற பெருமையை பெற்ற ஆன்-ஆன் பாண்டா கரடி வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தது. அதன் வயது 35. மனிதர்களின் வயது படி கணக்கிட்டால் இந்த பாண்டாவிற்கு தற்போது 105 வயதாகிறது என்று விலங்கியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றன.

1986ஆம் ஆண்டு சீனாவில் பிறந்த இந்த பாண்டா அந்நாட்டிலுள்ள வாலாங் தேசிய பூங்காவில் வளர்ந்து வந்தது. பின்னர், 1999ஆம் ஆண்டு, ஜியாஜியா என்ற பெண் பாண்டாவுடன் ஹாங்காங் ஓஷன் பார்க்கிற்கு பரிசாக அளிக்கப்பட்டது.

ஓஷன் பூங்கா உழியர்களும், சுற்றுலா பயணிகளும் மலர் கொத்துக்களை வைத்து மறைந்த பாண்டாவிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், குழந்தைகளும் பாண்டா கரடி நினைவாக அங்கு வைத்திருக்கும் புத்தகத்தில் கையெழுத்திட்டும், பாண்டாவின் படத்தை வரைந்தும் ஆன்-ஆன் பாண்டாவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

உலகின் மிக வயதான பெண் பாண்டா கரடி ஜியா-ஜியா தனது 38- வது வயதில் 2016 ஆம் ஆண்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது .

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.