28ந்தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு விடுமுறை? செஸ் ஒலிம்பியாட் ஆய்வு கூட்டத்தில் முதல்வர் ஆலோசனை…

சென்னை; செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான முன்னேற்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போத 28ந்தேதி தொடக்க விழாவுக்கான ஏற்பாடு, வீரர்கள் தங்கும் இட வசதி உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் விவாதித்தவர், அன்றைய தினம்  (28ந்தேதி) 28ந்தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு விடுமுறை? விடலாமா என்பது குறித்தும் விவாதித்தார்.

கொரோனா தொற்று குணமடைந்த நிலையில் 10 நாட்களுக்கு பிறகு இன்று சென்னை, தலைமைச் செயலகம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  செஸ் ஒலிம்பியாட் போட்டி ஏற்பாடுகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன்  ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, தொடக்க விழாவுக்கான ஏற்பாடு, வீரர்கள் தங்கும் இட வசதி உள்ளிட்ட பணிகளின் நிலை குறித்து கேட்டறிந்தார். அப்போது, தொடக்க விழா நடைபெறும் ஜூலை 28ந்தேதி அன்று சென்னை, காஞ்சிபுரம், செங்கற்பட்டு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கலாமா என்பதுகுறித்தும் விவாதித்தார்.

இந்த ஆலோசனை  கூட்டத்தில் அமைச்சர்கள் எ.வ. வேலு, மதிவேந்தன், மெய்யநாதன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சம்மந்தப்பட்ட துறை செயலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக நேற்று, செஸ் ஒலிம்பியாட் போட்டி ஏற்பாடுகள் குறித்து நியமிக்கப்பட்டுள்ள சிறப்புக்குழுக்களுடன் குழுக்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.