மத்திய அரசு ஆண்டு தோறும் நாடு முழுவதும் வெளியான மிகச் சிறந்த திரைப்படங்களுக்கும், ஒவ்வொரு துறை சார்ந்த கலைஞர்களுக்கு சிறப்பு விருதுகளையும் வழங்கி, பாராட்டியும், கவுரவப்படுத்தியும் வருகிறது.
இந்நிலையில், சிறந்த திரைப்படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் விவரம் டெல்லியில் அறிவிக்கப்பட்டு வருகிறது.
2020ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகளை அறிவிக்கிறது மத்திய அரசு அறிவித்து வருகிறது. அதில்,
* சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, சிறந்த திரைக்கதை ஆகிய 5 விருதுகளை சூரரைப் போற்று பெற்றுள்ளது.
* சிறந்த தமிழ் திரைப்படமாக ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம் தேர்வு.
* சிறந்த பின்னணி பாடகி விருது, அய்யப்பன் கோஷியும் படத்துக்காக நாட்டுப்புற பாடகி நஞ்சம்மாவுக்கு அறிவிப்பு.
* சிறந்த அறிமுக இயக்குநர் – மண்டேலா படத்துக்காக மடோன்னே அஷ்வினுக்கு அறிவிப்பு.
* சிறந்த வசனம் (தமிழ்) – மண்டேலா படத்திற்காக மடோன்னே அஷ்வினுக்கு அறிவிப்பு.
* சிறந்த இயக்குநர் – அய்யப்பன் கோஷியும் படத்துக்காக மறைந்த இயக்குநர் சசிதானந்தனுக்கு அறிவிப்பு.