இந்தியாவில் சமீபத்திய காலமாக அழகு துறை மிக வேகமாக வளர்ந்து வருகின்றது. அனைத்து வயது தரப்பினரும் அழகு துறையை நாடத் தொடங்கி விட்டனர். இது ஆண்களுக்கும், பெண்களுக்கும் உதவுகிறது.
அதிகரித்து வரும் மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக விரைவான நகரமயமாக்கல், அதிகரித்து வரும் வருமானம், விரைவான நகரமயமாக்கல், அதிகரித்து வரும் உழைக்கும் மக்கள் தொகை மற்றும் தொழில் நுட்ப முன்னேற்றங்கள் ஆகியவற்றின் காரணமாக இந்த துறையில் வளர்ச்சியானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் இந்த துறையில் வணிக வாய்ப்புகளும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிநாட்டு வேலையை தூக்கிப்போட்ட கேரள ஜோடி.. ஸ்மார்ட் ஐடியா – சொந்த தொழில்.. செம லாபம்..!
தேவை அதிகரிக்கலாம்
குறிப்பாக அழகு நிலையங்கள் அல்லது சலூன்களுக்கு தேவை அதிகம் உள்ளது. இதன் தேவை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அழகு நிலைய வணிக வளர்ச்சியானது 35% உயர்ந்து வருகின்றது.
இந்தியாவில் அழகு சார்ந்த வணிகம் இரு மடங்கு அதிகரிக்கலாம் என்றும் நிபுணர்கள் எதிர்பார்க்கப்படுகின்றனர். ஆக இத்துறையில் வணிக வாய்ப்பு என்பது அதிகம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா, ஐரோப்பாவினையே விஞ்சலாம்
குறிப்பாக இந்தியாவின் அழகு வணிகம் என்பது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளை விட இருமடங்கு வளர்ச்சி காணலாம் என லாவிஷ் சலூன்ஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், நிர்வாக அதிகாரியுமான பவர் ரெட்டி கூறுகின்றார்.
கவனிக்க வேண்டிய விஷயங்கள்
ஆக நீங்கள் ஒரு சலூன் அல்லது அழகு நிலையம் அமைக்க திட்டமிட்டால் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்று பார்க்கலாம் வாருங்கள்.
விரிவான வணிக திட்டத்தை போடுங்கள்
எந்த வகையான சலூன்
பொருளாதாரம்
வணிகம்
பிரீமியம்
வாடிக்கையாளர்கள் எப்படி தக்கவைத்துக் கொள்வது
அமையும் இடம்
கட்டணங்கள் & சலுகைகள்
பொருட்கள்
லைசென்ஸ்
விரிவான வணிக திட்டத்தை போடுங்கள்
இது அழகு நிலையமோ அல்லது சலூன் அமைக்க மட்டும் அல்ல, எந்த வணிகமானலும் விரிவான வணிக திட்டத்தை போடுங்கள். உதாரணத்திற்கு நிதி, எப்படி மார்கெட்டிங் செய்வது, ஆய்வு, கட்டணம் எவ்வளவு, எவ்வளவு தள்ளுபடி கொடுக்கலாம். இது தவிர வாடகை எவ்வளவு, உள்கட்டமைப்பு செலவு, அழகு நிலையத்திற்கு தேவையான பொருட்கள், வாடிக்கையாளர்கள் யார், முதலீடு, மாத வருமானம் என அனைத்தையும் திட்டமிட வேண்டும்.
என்ன வகையான சலூன்
இன்றைய காலகட்டத்தில் பல வகையான சலூன்கள் உண்டு. அதில் எதனை வைக்க போகிறீர்கள். எது எங்கு பொருந்தும் என அலசி ஆராய்ந்து அதன் பின்னர் முடிவெடுங்கள்.
இது நடுத்தர மக்களுக்கும் ஏற்றவாறு இருக்க வேண்டும். அதே அமயம் தரமான பொருட்களை பயன்படுத்த வேண்டும். அதேபோல முடிந்த மட்டில் துறைசார்ந்த பணியாளர்களை துணைக்கு அமர்த்திக் கொள்ளுங்கள்.
வாடிக்கையாளர்களுக்கு உண்மையாக இருங்கள்
வாடிக்கையாளர்களுக்கு உண்மையாக இருங்கள். ஒரு முறை வந்தால் மறுபடியும் திரும்ப திரும்ப உங்களை தேடி வரும் படி பாருங்கள். நீங்கள் ஒருமுறை நீங்கள் தவறு செய்து விட்டால், மறுமுறை உங்களை தேடி வர மாட்டார்கள்.
சரியான இடமாக இருக்கணும்
அதேபோல உங்கள் அழகு நிலையமோ, சலூனோ அமையும் இடமும் சரியான இடமா என பார்த்துக் கொள்ளுங்கள். இது வாடிக்கையாளர்களுக்கு வந்து செல்ல உகந்ததா? எளிதில் அணுகும் விதத்தில் உள்ளதா? முடிந்தமட்டில் தரை தளத்தில் அமைக்க முடியுமா என பாருங்கள். மாடிகளில் அமையும்போ
கட்டணம் & சலுகை
எல்லாவற்றுக்கும் மேலாக கட்டணம் என்பது உகந்ததாக இருக்க வேண்டும். பல தரப்பினருக்கும் ஏற்றவாறு இருக்க வேண்டும். அதேபோல அடிக்கடி வந்து செல்லும் வாடிக்கையாளர்களுக்கு சில சலுகைகளை கொடுக்கலாம். இதுவே பல வாடிக்கையாளர்களை ஈர்க்க உதவும். பழைய வாடிக்கையாளர்களும் விட்டு செல்ல மாட்டார்கள்.
லைசென்ஸ்
நீங்கள் ஒரு சலூனை அமைக்க அரசின் லைசென்ஸ் வேண்டும். எனினும் இது நீங்கள் அமைக்கும் ஏரியாவினை பொறுத்து இருக்கும். ஜிஎஸ்டி நம்பர் அல்லது முனிசிபல் ஆபிஸில் பதிவு அல்லது வர்த்த லைசென்ஸ் என எடுக்க வேண்டும். இது தவிர தீயணைப்பு பாதுகாப்பு உள்ளிட்ட சில அம்சங்கள் தேவைப்படும்.
How to set up a small scale salon or beauty salon? How to plan?
How to set up a small scale salon or beauty salon? How to plan?/பல மடங்கு வளர்ச்சி காணப்போகும் அழகு துறை.. அழகு நிலையம் அமைப்பது எப்படி?