காவல்துறை பதிலளிக்கும் வரை அதிமுகவின் 4 மாவட்ட செயலாளர்கள் உட்பட 11 பேரை கைது செய்யக்கூடாது என்று சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை வானகரத்தில் கடந்த 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதன்போது, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் முன்பு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து, அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இந்த மோதல் தொடர்பாக, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களான ஆதிராஜாராம், விருகை ரவி, அசோக் உட்பட 11 பேர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில், காவல்துறை பதிலளிக்கும் வரை அதிமுகவின் 4 மாவட்ட செயலாளர்கள் உட்பட 11 பேரை கைது செய்யக்கூடாது என்று சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.