கூட்டம் கூட்டமாக வெளியேறும் இந்தியர்கள்.. என்ன காரணம்..?!

வர்த்தகத்திலும், தொழிற்துறையிலும் வெற்றிபெற்ற இந்தியர்களும், பணக்கார இந்தியர்களும் எப்போதும் இல்லாத வகையில் இந்தியா குடியுரிமையை வேண்டாம் என விட்டு வெளிநாட்டில் குடியுரிமை பெற்று வருகின்றனர்.

இந்த எண்ணிக்கை எப்போதும் இல்லாத வகையில் 2020-21 ஆம் நிதியாண்டில் 1.63 லட்சம் பேர் இந்திய பாஸ்போர்ட்-வை கிழித்துப் போட்டுவிட்டு வெளிநாட்டில் குடியுரிமை பெற்றுள்ளனர்.

5 வருடத்திற்கு முன்பு ஒப்பிடுகையில் இதன் எண்ணிக்கை தற்போது இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது மிகவும் வருந்த வேண்டிய விஷயமாக உள்ளது.

இந்த விஷயத்தில் பாகிஸ்தான் இலங்கையை விட இந்தியா மோசம்.!

இந்தியர்கள்

இந்தியர்கள்

இந்தியாவை விட்டு வெளியேறும் மக்கள் அதிகளவில் அமெரிக்காவில் தான் குடியுரிமை பெறுகின்றனர். அமெரிக்காவைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா, கனடா, பிரிட்டன், இத்தாலி ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடிக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

தற்போது கேள்வி என்னவென்றால் பிரதமர் நரேந்திர மோடி 75 வது சுதந்திர தினம் மற்றும் 100 சுதந்திர தினமான 2047 ஆம் ஆண்டு மத்தியாலான காலகட்டத்தை இந்தியா அனைத்து விதத்திலும் புதிய உச்சத்தை அடையும் Amrit Kaal எனக் குறிப்பிடும் இந்த நேரத்தில் பணக்கார மற்றும் வெற்றிபெற்ற இந்தியர்கள் வெளியேறுவது ஏன்..? இவர்களுக்கு இந்தியா மீதும், இந்திய கொடியின் மீதும் பற்று இல்லையா..? என்ற கேள்வி எழுகிறது.

Amrit Kaal மீது நம்பிக்கை
 

Amrit Kaal மீது நம்பிக்கை

இதேவேளையில் மோடி சொல்லும் Amrit Kaal மீதும், இந்தியாவின் வளர்ச்சிப் பாதையின் மீதும் நம்பிக்கை இல்லையா என்பது தான் முக்கியக் கேள்வியாகவும் உள்ளது.

இந்தியாவை விட்டு வெளியேறிய மக்கள் பிழைப்புக்காகச் செல்லவில்லை, இதேபோல் பஞ்சம் காரணமாகவோ, போர் காரணமாகவோ செல்லவில்லை.

அதிகம் படித்தவர்கள், பணக்காரர்கள்

அதிகம் படித்தவர்கள், பணக்காரர்கள்

இந்திய குடியுரிமையை விட்டு வேறு நாடுகளில் குடியுரிமை பெற்றவர்கள் அனைவரும் அதிகம் படித்தவர்கள், பணக்காரர்கள், வர்த்தகம் மற்றும் தொழில்துறையில் சாதனை படைத்தவர்கள்.

இதேவேளையில் நடப்பு ஆண்டில் சுமார் 8000 பெரும் பணக்காரர்கள் இந்தியர்கள் இந்திய குடியுரிமையை விட்டு வேறு நாட்டில் குடியுரிமை பெறுவார்கள் எனக் கணித்துள்ளது.

15 வருட வளர்ச்சி

15 வருட வளர்ச்சி

கடந்த 15 வருடத்தில் இந்தியாவில் நடுத்தர மக்கள் பலர் கல்வி, தொழில்நுட்ப உதவிகள் உடன் மிகப்பெரிய அளவில் பொருளாதாரத்தில் மேம்பட்டு உள்ளனர்.

மிடில் கிளாஸ் பணக்காரர்கள்

மிடில் கிளாஸ் பணக்காரர்கள்

இதனால் இந்தப் புதிய மற்றும் மிடில் கிளாஸ்-ல் இருந்து பணக்காரர்கள் தங்களது வளர்ச்சியின் வேகத்தைக் குறைக்காமல் புதிய வாய்ப்பு, மேம்பட்ட வாழ்க்கையைத் தேடி வெளிநாடுகளுக்கு நிரந்தரமாகக் குடியேற துவங்கியுள்ளனர்.

மேம்பட்ட வாழ்க்கை

மேம்பட்ட வாழ்க்கை

இதேவேளையில் இந்த எண்ணிக்கை பெரிய அளவில் இனி வரும் காலத்திலும் அதிகரிக்கும் என்று தான் கூற முடியும். இந்தியாவிலும் அதிகப்படியான வளர்ச்சி உள்ளது, மேம்பட்ட வாழ்க்கை முறை கிடைக்கும், அனைவருக்குமான வளர்ச்சி வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையை மத்திய மாநில அரசு தனது கொள்கைகள் வாயிலாக அளிக்கும் பட்சத்தில் இதன் நிலைமை மாறும்.

இந்தியா – ரஷ்யா: இனி டாலர் தேவையில்லை, ரூபாய் போதும்.. ஆர்பிஐ அதிரடி..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Why 1.63 lakh Indians renounced their citizenship to take up foreign citizenship

Why 1.63 lakh Indians renounced their citizenship to take up foreign citizenship கூட்டம் கூட்டமாக வெளியேறும் இந்தியர்கள் என்ன காரணம்..?!

Story first published: Friday, July 22, 2022, 19:47 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.