இந்தியாவில் தற்போது டிஜிட்டல் சேவைகள் அதிகமான நிலையில் வங்கிகளுக்குச் சென்று கடன் வாங்கும் வழக்கம் மலையேறிவிட்டது.
மொபைல் ஆப்-ல் நாலு பட்டனை தட்டினால் கடன் தரக்கூடிய மொபைல் செயலிகள் பல வந்திருக்கும் நிலையில், பல மோசடி செய்யும் செயலிகளும் சந்தையில் இருக்கிறது. இதைப் பற்றித் தான் தற்போது டெல்லி போலீஸ் எச்சரித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் இப்படியொரு டாக்டர்.. 600 கோடி சொத்து நன்கொடை..!
சீன கடன் செயலி
எளிதாகக் கடன் கொடுக்கப்படும் என்ற பெயரில் சீன கடன் செயலி ஒன்று மக்களை ஏமாற்றிப் பல கோடி ரூபாய் மோசடி செய்து உள்ளது டெல்லி போலீஸ் கண்டுபிடித்து, இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதன் வாயிலாக டெல்லி காவல் துறை கடன் செயலிகளைப் பயன்படுத்தும் அனைத்து செயலிகளையும் பாதுகாப்புடன் பயன்படுத்த எச்சரித்துள்ளது.
4 பேர் கைது
ஆன்லைன் கடன் செயலி மோசடியில் ஈடுபட்டதாக அனில் குமார் (35), அலோக் ஷர்மா (24), அவ்னிஷ் (22) மற்றும் கண்ணன் (35) ஆகிய நான்கு பேரை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த நான்கு பேர் தவிர, போலி கால் சென்டரில் பணியாற்றிய 149 பேருக்கும் போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
புகார்
NCRP போர்ட்டரில் ஒருவர் புகார் அளித்ததன் பெயரில் 50,000 ரூபாய் கடன் பெறுவதற்காகப் பேஸ்புக்கில் விளம்பரம் மூலம் கவரப்பட்டு, ஆன் ஸ்ட்ரீம்’ என்ற பெயரில் இயக்கி வரும் கடன் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார். இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்யும் போது போனில் கான்டெக்ட்ஸ், கேளரி போன்ற பலவற்றைப் பயன்படுத்த அனுமதி கோரியுள்ளது.
ஆன் ஸ்ட்ரீம் செயலி
கடன் வேண்டும் என்பதால் அனைத்திற்கும் அனுமதி கொடுத்துள்ள அவர், 50000 ரூபாய் கடன் கேட்ட போது வெறும் 6,870 ரூபாய் மட்டுமே பெற்றுள்ளார். இந்தக் கடனை வசூலிக்க இந்தக் கடன் நிறுவனம் அவருக்குக் கெட்டவார்த்தையில் அழைப்பு, மெசேஜ், அவருடைய கேளரியில் இருந்து எடுக்கப்பட்ட பர்சனல் போட்டவை மார்ப் செய்து மிரட்டியுள்ளனர்.
1 லட்சம் ரூபாய்
இந்தப் பிரச்சனையில் இருந்து விடுபட சுமார் 1 லட்சம் ரூபாய் வரையில் பாதிக்கப்பட்டவர் செலுத்தியுள்ளார். ஆயினும் மேற்கொண்டு பணத்தைக் கேட்டுத் தொந்தரவு அளித்து மட்டும் அல்லாமல் தகாத வார்த்தைகளில் பேசிய நிலையில் NCRP போர்ட்டலில் புகார் அளித்துள்ளார்.
அனில் குமார்
இந்தப் புகாரின் அடிப்படையில் செய்யப்பட்ட விசாரணையில் அனில் குமார் என்பவர் மொத்த மோசடிக்கும் மூளையாகச் செயல்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. இந்த ஆன் ஸ்ட்ரீம் செயலியை இயக்க சுமார் 134 பெண் டெலிகாலர்கள், 15 ஆண் டெலிகாலர்கள் என 3 அணிகள் இயங்கி வந்தது தெரிய வந்துள்ளது.
சில்பானி இன்டர்நேஷனல்
சில்பானி இன்டர்நேஷனல் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை உருவாக்கி, இந்நிறுவனத்தின் பெயரில் 300 சிம் கார்டுகளை இந்த மோசடி கும்பல் வாங்கியுள்ளது. அதில் 100 சிம் கார்டுகளைத் தாகாத வார்த்தைகளைக் கொண்டு வாட்ஸ்அப் மெசேஜ்களை அனுப்பப் பயன்படுத்தப்பட்டது.
சீனர்கள்
இந்த ஆன் ஸ்ட்ரீம் என்னும் சீன கடன் செயலி நிறுவனம் அப்பாவி மக்களிடம் பணம் பறித்துள்ளனர். ஆல்பர்ட் மற்றும் ட்ரே என்ற பெயரில் இரண்டு சீனர்கள் ரூ.10 கோடி வரையிலான பணத்தை மக்களிடம் பறித்துள்ளனர். மேலும் மார்ச் மாதத்தில் மட்டும் கமிஷனாக ரூ.3 கோடி பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.
கூட்டம் கூட்டமாக வெளியேறும் இந்தியர்கள்.. என்ன காரணம்..?!
ON Stream Chinese loan app extorted Rs 10 crore from common people harassed and threatened with morphed pictures
ON Stream Chinese loan app extorted Rs 10 crore from common people harassed and threatened with morphed pictures சீன கடன் ஆப்.. உஷாரா இருங்க மக்களே.. 10 கோடி அபேஸ்..!