கனேடிய நகரம் ஒன்றிலுள்ள தொழிற்சாலை ஒன்றிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக மக்கள் அளித்த புகாரையடுத்து, அங்கு சென்ற அதிகாரிகள், அந்த இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையில் சுமார் எட்டு டன் இறைச்சி அழுகிப்போயிருப்பதைக் கண்டுபிடித்துள்ளார்கள்.
ஒன்ராறியோவிலுள்ள Bavarian Meat Products என்ற இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையின் கதவுகள் பூட்டப்பட்டிருக்க, ஏராளம் ஈக்கள் மொய்த்துக்கொண்டிருக்க, துர்நாற்றம் வேறு வீச, பாதுகாப்புக் கவச உடையுடன் அங்கு நுழைந்த சுத்தம் செய்யும் நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த அலுவலர்கள், அந்த தொழிற்சாலைக்குள் அழுகிப்போய் நாற்றம் வீசிக்கொண்டிருந்த இறைச்சியை அங்கிருந்து அகற்றியுள்ளார்கள்.
அந்த நிறுவனத்தை அதன் உரிமையாளர்கள் விற்றுவிட்டு சென்றுவிட, புதிதாக வாங்கியவர்களோ அதை சுத்தம் செய்யாமல் அப்படியே விட்டுவிட, அங்கிருந்த குளிர்பதன இயந்திரங்கள் இயங்காமல் போக, அவற்றில் வைக்கப்பட்டிருந்த இறைச்சி கெட்டுப்போய் துர்நாற்றம் வீசத்துவங்கியுள்ளது.
Screenshot from Google Maps
எவ்வளவோ முயன்றும் அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களைக் கண்டுபிடிக்க முடியாததால் அந்த கட்டிடத்தை விற்பனை செய்வதென அதிகாரிகள் முடிவு செய்துள்ளார்கள்.
அங்கிருந்து அகற்றப்பட்ட சுமார் எட்டு டன் இறைச்சி கிருமிநீக்கம் செய்யப்பட்டு குப்பை கொட்டுமிடத்தில் புதைக்கப்பட உள்ளது.
Submitted by the Ontario Liberal Party