இந்தியாவின் மிகப்பெரிய வணிக சாம்ராஜ்ஜியங்களில் ஒன்றான ரிலையன்ஸ் குழுமத்தினை சேர்ந்த, ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனம் முதல் காலான்டில் 17,000 பேரை பணியில் சேர்த்துள்ளதாக அறிவித்துள்ளது.
நிலவி வரும் சவாலான நிலைக்கு மத்தியில் அதன் பணியமர்த்தல் என்பது வலுவான வளர்ச்சியினையே பதிவு செய்துள்ளது.
சில்லறை விற்பனை பிரிவில் புதியதாக சேர்க்கப்பட்ட வாடிக்கையாளர்களின் மொத்த வாடிக்கையாளர்களுடன் சேர்த்து, மொத்தம் 3,79,000 பேராக உயர்ந்துள்ளது.
எகிறிய ஜியோ லாபம்.. அர்பு எவ்வளவு தெரியுமா.. உற்சாகத்தில் முதலீட்டாளர்கள்!
சில்லறை பிரிவில் லாபம்
இதன் நிகர லாபம் 114.2% அதிகரித்து, 2061 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது. எனினும் இது இன்னும் மதிப்பாய்வில் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மொத்த வருவாய் விகிதம் 58,569 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 51.9% அதிகரித்துள்ளது.
மார்ஜின் விகிதம்
இதன் செயல்பாட்டின் மூலம் கிடைத்த எபிட்டா விகிதமானது 3897 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவும் கடந்த ஆண்டினை காட்டிலும் 180.4% அதிகரித்துள்ளது.அதன் மார்ஜின் விகிதமும் 350 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து, 7.6% ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 4.1% ஆக இருந்தது.
முக்கிய வளர்ச்சி
இதன் வளர்ச்சியில் பேஷன் மற்றும் லைஃப்ஸ்டைல் , நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பலவும் நல்ல வளர்ச்சியினை கண்டுள்ளன. ரிலையன்ஸ் ரீடெயில் ஆனது, ரிலையன்ஸ் ரீடெயில் வென்சர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.
208 மில்லியன் வாடிக்கையாளர்கள்
இந்த காலாண்டில் அதன் பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் 200 மில்லியனை தாண்டியுள்ளதாகவும், காலண்டின் முடிவில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 29% அதிகரித்து, 208 மில்லியனை தாண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ரிலையன்ஸ் ரீடெயில் 792 ஸ்டோர்களை திறந்து, இப்போது நாடு முழுவதும் 45.5 மில்லியன் சதுர அடியில், 15,866 கடைகளை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Reliance Retail announces 17,000 hires in first quarter
Reliance Retail announces 17,000 hires in first quarter/17,000 பேருக்கு வாய்ப்பளித்த முகேஷ் அம்பானி.. எப்படி தெரியுமா?