வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோல்கட்டா : மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமன ஊழல் தொடர்பாக, அம்மாநிலத்தின் இரு அமைச்சர்கள் உள்ளிட்ட மூவரின் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் அமைச்சரின் உதவியாளரிடமிருந்து கட்டுக்கட்டாக ரூ. 20 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் நடந்த ஊழல் தொடர்பாக அமைச்சர்கள் பார்த்தா சட்டர்ஜி, பரேஷ் அதிகாரி உள்ளிட்டோர் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது. இந்நிலையில், பார்த்தா சட்டர்ஜி, பரேஷ் அதிகாரி, ஆரம்ப கல்வி வாரியத்தின் முன்னாள் தலைவர் மாணிக் பட்டாச்சார்யா ஆகியோர் வீடுகளில், அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இது குறித்து அமலாக்கத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஆசிரியர் நியமன ஊழலில் பல கோடி ரூபாய் கைமாறியிருப்பது சி.பி.ஐ., விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், அமைச்சர்கள் பார்த்தா சட்டர்ஜி, பரேஷ் அதிகாரி மற்றும் மாணிக் பட்டாச்சார்யா ஆகியோரின் வீடுகளில் ஒரே சமயத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பின்னர் பார்த்தா சட்டர்ஜியின்உதவியாளர் வீட்டில் ரூ. 20 கோடிக்கு மேல் கட்டுகட்டாக பணம் சிதறிக்கிடந்தது. அவற்றை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.மேலும் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement