எதிர்வரும் 25ஆம் திகதி திங்கட்கிழமை டெங்கு ஒழிப்பு விசேட தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் மீண்டும் டெங்கு நோய் பரவும் அனர்த்தம் அதிகமாக இருப்பதனால் இந்த வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன்காரணமாக நாட்டின் பல பிரதேசங்களை உள்ளடக்கிய வகையில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.