ஆடி வெள்ளி : காமாட்சி கோயிலில் தீபம் ஏற்றிய ஐஸ்வர்யா ரஜினி
ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினி அடுத்தபடியாக ஹிந்தியில் ஓம் சாதி சால் என்ற படத்தை தனது தங்கை சௌந்தர்யாவின் கணவரான விசாகனை வைத்து இயக்குவதற்கு தயாராகி வருகிறார். இந்த நிலையில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இன்று காமாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று தீபம் ஏற்றி வழிபாடு நடத்தியுள்ளார் ஐஸ்வர்யா ரஜினி. தான் தீபம் ஏற்றி வழிபட்ட புகைப்படங்களையும் அவர்பதிவிட்டு இருக்கிறார். அந்த பதிவில், ஆடி வெள்ளி எப்பொழுதும் காப்பாய் காமாட்சி என்ற ஒரு கேப்ஷனும் பதிவிட்டுள்ளார்.