புதுச்சேரியில், நள்ளிரவில் வீடு புகுந்து நாட்டு வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் ரவுடி கொலை செய்யப்பட்டது தொடர்பாக 7 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சண்முகாபுரத்தைச் சேர்ந்த பன்னீர் செல்வம் என்ற ரவுடி நேற்று நள்ளிரவு தனது வீட்டில், சக்தி என்ற நண்பருடன் மது அருந்தியதாக தெரிகிறது. அப்போது மழை பெய்துக் கொண்டிருந்த நிலையில், பைக்கில் வந்த மர்ம கும்பல் வீடு புகுந்து நாட்டு வெடிகுண்டு வீசியதோடு அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் இருவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது.
3 வருடங்களுக்கு முன்பு ஜெயபால் என்பவர் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்கு பழியாக இந்த கொலை நடைபெற்றது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.