Oppo Reno 8: ஜூலை 25 விற்பனைக்கு வரும் ஒப்போவின் சிறந்த கேமரா போன்!

Oppo Reno 8 5G first sale: ஒப்போ நிறுவனம் சமீபத்தில் புதிய ரெனோ 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்ளை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த போனில் கேமராவுக்கென தனி MariSilicon X சிப் கொடுக்கப்பட்டுள்ளது.

சீனாவில் முன்னதாகவே அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ ரெனோ 8 சீரிஸ் போன்கள் தற்போது இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டுவரப்படுகிறது. ஜூலை 25 அன்று விற்பனைக்குக் கொண்டுவரப்படும் இந்த ஒப்போ ரெனோ 8 போன் குறித்து தெரிந்துகொள்ளலாம்.

Apple Watch: ஒழுங்கற்ற இதயத்துடிப்பு – பெரிய சிக்கலில் இருந்து பெண்ணை காத்த ஆப்பிள் வாட்ச்

ஒப்போ ரெனோ 8 சீரிஸ் அம்சங்கள் (Oppo Reno 8 Series Specifications)

புதிய ஒப்போ ப்ரோ போன், 120Hz ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் கொண்ட 6.62″ இன்ச் முழுஅளவு எச்டி+ டிஸ்ப்ளே கொண்டிருக்கும். இதில் HDR10+ ஆதரவும் வழங்கப்படும். ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் இதில் நிறுவப்பட்டிருக்கும். LPDDR5 ரேமும், UFS 3.1 ஸ்டோரேஜ் மெமரியும் வழங்கப்படலாம்.

ஒப்போ ரெனோ 8 போனில் மீடியாடெக் டிமென்சிட்டி 1300 5ஜி சிப்செட் (MediaTek Dimensity 1300) பயன்படுத்தப்படுகிறது. ஸ்மார்ட்போனை 4,500mAh திறன் கொண்ட பேட்டரி சக்தியூட்டும். இதனை ஊக்குவிக்க 80W வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் வழங்கப்படும்.

பின்பக்க கேமராவைப் பொருத்தவரை, 50MP மெகாபிக்சல் சோனி IMX766 முதன்மை கேமரா, 8MP மெகாபிக்சல் அல்ட்ரா வைட் சென்சார், 2MP மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் ஆகிய மூன்று கேமராக்கள் கொண்ட அமைப்பு இருக்கும். செல்பி, வீடியோ அழைப்புகளுக்காக 32MP மெகாபிக்சல் கேமரா வழங்கப்படலாம்.

இனி எந்த பிரச்சினையும் இருக்காது – Nothing Phone 1 முதல் OTA அப்டேட்!

ஒப்போ ரெனோ 8 சீரிஸ் விலை (Oppo Reno 8 Series Price in India)

Oppo Reno 8 ஸ்மார்ட்போனின் விலை 8GB+128GB மாறுபாட்டிற்கு 29,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் மேம்பட்ட மாடலான Oppo Reno 8 Pro 12GB+256GB வேரியண்டின் விலை ரூ.45,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன்களுக்கு கூடுதலாக வங்கி சலுகைகளும் வழங்கப்படுகிறது. பேங்க் ஆப் பரோடா வாடிக்கையாளர்களுக்கு ரூ.3000 தள்ளுபடி கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்குக் கொண்டுவரப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.