இந்திய வர்த்தகச் சந்தை கடந்த 3 வருடத்தில் ஏற்பட்ட ரோலர்கோஸ்டர் சூழ்நிலையில் அதிகளவில் பாதிக்காத ஒரு துறை என்றால் அது கட்டாயம் ஐடி சேவைத் துறை தான்.
ஆனால் இத்துறை தற்போது அதிகளவிலான பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது என்பதை மறுக்க முடியாது. ஒருபக்கம் ஊழியர்கள் வெளியேற்றம் அதிகமாக இருப்பதால் ஏற்கனவே கைப்பற்றியுள்ள திட்டங்களை உரிய நேரத்தில் டெலிவரி செய்ய முடியுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்நிலையில் நாட்டின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களான டிசிஎஸ், ஹெச்சிஎல், விப்ரோ ஆகியவை ஊழியர்களைத் தக்க வைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே தனியாகப் பல முயற்சிகளை எடுத்து வருகிறது.
தடுமாறும் தங்கம் விலை.. இனியும் குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன?
ஐடி சேவை நிறுவனங்கள்
இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் கொரோனா, ரஷ்யா – உக்ரைன் போர் காலகட்டத்தில் எவ்விதமான வர்த்தகத்தை இழக்காமல் இருந்தது, நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்திற்குப் பெரிய அளவில் பலன் அளித்தது. ஆனால் தற்போது நிலைமை மொத்தமாக மாறியுள்ளது, இதற்கு முதலும் முக்கியமான காரணம் ஊழியர்கள் தான்.
பிரஷ்ஷர்கள்
ஐடி நிறுவனங்கள் பல வருடமாகப் பிரஷ்ஷர்களுக்குச் சம்பளம் உயர்த்தாமல் ஆட்டம் காட்டிய நிலையில், இந்த வருடம் தான் அதிகப்படியான டிமாண்ட் காரணமாகப் பிரஷ்ஷர்களின் சம்பளத்தை உயர்த்தியது.
சம்பள உயர்வு
இதேபோல் ஐடி ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் 5-7 சதவீதம் சம்பள உயர்வை மட்டுமே அளித்து வந்த நிலையில் தற்போது அதிகப்படியான சம்பள உயர்வு, பதவி உயர்வை கொடுக்கத் துவங்கியுள்ளது.
ஸ்லோடவுன்
இந்திய ஐடி நிறுவனங்களுக்கு ரெசிஷன் காரணமாகப் புதிய திட்டங்கள் கிடைப்பது குறையும் என்பதால் புதிதாக நியமிக்கப்படும் ஊழியர்களை ஸ்லோடவுன் செய்துள்ளது. இதேவேளையில் பல வாரத் தாமதத்திற்குப் பின்பு ஐடி ஊழியர்களுக்குக் கடந்த நிதியாண்டுக்கான சம்பள உயர்வு அளிக்கப்பட்டு உள்ள வேளையில் புதிய வேலைவாய்ப்புகளைத் தேட துவங்கியுள்ளனர்.
அதிரடி சலுகை
இப்படிச் சம்பள உயர்வை வாங்கி விட்டு நிறுவனத்தை விட்டு வெளியேறும் ஊழியர்களைக் கட்டுப்படுத்த ஐடி நிறுவனங்கள் மிட் டெர்ம் சம்பள உயர்வு, பதவி உயர்வு, ரிடென்ஷன் போனஸ்-ஐ வாரி வழங்கத் துவங்கியுள்ளது. ஐடி நிறுவனங்கள் எந்த அளவிற்குப் பிரச்சனையில் சிக்கியுள்ளது என்பதை விப்ரோ நிறுவனத்தின் அறிவிப்பைப் பார்த்தால் தெரிந்து விடும்.
விப்ரோ-வின் தரமான அறிவிப்பு
விப்ரோ தனது ஜூன் காலாண்டு முடிவுகளை வெளியிடும் போது, வருடாந்திர அடிப்படையில் அளிக்கப்படும் பதவி உயர்வு இனி காலாண்டு அடிப்படையில் தனது ஊழியர்களுக்கு அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.மேலும் இந்த மாற்றம் ஜூலை மாதம் முதல் துவங்கும் என்றும், அடுத்த மாதம் முதல் சம்பள உயர்வும் நடைமுறைக்கு வரும் என அறிவித்துள்ளது.
பதவி உயர்வு + சம்பள உயர்வு
ஐடி நிறுவனங்களில் பதவி உயர்வு என்றால் கூடவே சம்பள உயர்வும் இருக்கும் என்பதால் ஊழியர்கள் வெளியேற்றம் பெரிய அளவில் தடுக்க முடியும். பிற ஐடி நிறுவனங்கள் காலாண்டு அடிப்படையிலான பதவி உயர்வு தவிர ரிடென்ஷன் போனஸ், ஆவுட் ஆர் சைக்கிள் வேஜி ரிவிஷன், சம்பள உயர்வு எனப் பலவற்றையும் கொடுக்கத் தயாராகியுள்ளது.
டாப் 3 ஐடி நிறுவனங்கள்
டிசிஎஸ், இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ ஆகிய டாப் 3 ஐடி நிறுவனங்கள் 2022 நிதியாண்டில் தங்களது மொத்த வருவாயில் சுமார் 62 சதவீதத்தை ஊழியர்களின் சம்பளத்திற்காக மட்டுமே செலவு செய்துள்ளது. தற்போது அளிக்கப்பட்டு உள்ள சலுகைகள் மூலம் அதன் அளவு மேலும் அதிகரிப்பது மட்டும் அல்லாமல் ஐடி சேவை நிறுவனங்களின் லாப அளவுகள் பெரிய அளவில் குறையும்.
அட்ரிஷன் விகிதம்
ஜூன் காலாண்டில் டிதிஎஸ் நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதம் 19.7 சதவீதமாக உள்ளது, விப்ரோ நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதம் 23.3 சதவீதமாக உள்ளது, ஹெச்சிஎல் நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதம் 23.8 சதவீதமாக உள்ளது. இதைக் குறைக்கத் தான் தற்போது அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது.
TCS, HCL, Wipro: Announced promotion on quarterly, big salary hike To Retain Talent Amid High Attrition
TCS, HCL, Wipro: Announced promotion on quarterly, big salary hike To Retain Talent Amid High Attrition ஐடி ஊழியர்களைத் தக்க வைக்க டிசிஎஸ், ஹெச்சிஎல், விப்ரோ முக்கிய அறிவிப்பு..!